சிம்பு மேல் இவ்வளவு குற்றச்சாட்டா? அவரே ஒரு குழந்தைதான்… சப்போர்ட்டுக்கு வந்த பிரபல இயக்குனர்…
சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த “மாநாடு”, “வெந்து தணிந்தது காடு” ஆகிய திரைப்படங்கள் சிம்புவை வேற லெவலுக்கு கொண்டுசென்றுவிட்டது. ஆனால் சில வருடங்களுக்கு முன்பு சிம்பு மேல் அனேக புகார்கள் இருந்தன.
“அவர் ஷுட்டிங்கிற்கு சொன்ன நேரத்திற்கு வரமாட்டார். டப்பிங்கிற்கு வரமாட்டார்” என பல புகார்கள். மேலும் சிம்பு இமயமலைக்கு சென்று சாமியாராக ஆகப்போவதாகவும் கூறிவந்தார். ஆதலால் படங்களில் கோட்டைவிட்டார்.
எனினும் அதன் பின் மீண்டும் பழைய சிம்புவாக உடலை மெருகேத்திக்கொண்டு வந்தார். அதன் பின்தான் “ஈஸ்வரன்”, “மாநாடு” என கம்பேக் கொடுத்தார். தற்போது “பத்து தல” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதனிடயே சிம்பு “வந்தா ராஜாவாதான் வருவேன்” திரைப்படத்தில் நடித்தபோது அவருடன் பழகிய சில அனுபவங்களை குறித்து வசனக்கர்த்தா கே செல்வபாரதி, சில ஆண்டுகளுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டார்.
அதில் “வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன் சிம்பு குறித்து எங்களுக்கு ஒரு பார்வை இருந்தது. அவர் சரியாக ஒத்துழைக்கமாட்டார் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் படப்பிடிப்பு தொடங்கிய பிறகு அவர் மேல் வைத்திருந்த தப்பான எண்ணங்கள் எல்லாம் உடைந்துவிட்டது. சிம்பு ஒரு குழந்தை. எதுக்கு அவரை பற்றி இவ்வளவு தவறான விஷயங்களை பரப்பியிருக்கிறார்கள் என தோன்றியது.
இசையமைப்பாளர் ரஹ்மான் இரவில்தான் பணியாற்றுவார். அவரை நாம் தவறு சொல்ல முடியாது. அது அவருடைய ஸ்டைல். அதே போல்தான் சிம்புவும். அவருக்கென்று ஒரு ஸ்டைல் இருக்கிறது. காலையில் 9 மணிக்கு படப்பிடிப்பிற்கு வரச்சொன்னால் பத்து மணிக்குள் வரட்டுமா என கேட்பார். நாங்கள் சரி என்று சொல்லிவிடுவோம். அதற்குள் மற்ற நடிகர்களுக்குரிய காட்சியை எடுத்துவிடுவோம். சிம்பு சரியாக பத்து மணிக்கு வந்துவிடுவார்” என கூறினார்.
மேலும் பேசிய அவர் “ஒரு நடிகரின் விருப்பத்திற்கு ஏற்றவாறுதான் நாம் வேலை பார்க்கவேண்டும். அப்போதுதான் அவர் சந்தோஷமாக பணியாற்றுவார். அப்படி பணியாற்றும்போதுதான் படம் நன்றாக வரும்” எனவும் கூறினார்.
“வந்தா ராஜாவாதான் வருவேன்” திரைப்படம் 2019 ஆம் ஆண்டு வெளிவந்தது. அந்த காலக்கட்டத்தில்தான் சிம்புவின் மேல் அனேக புகார்கள் இருந்தது. இந்த நிலையில் செல்வபாரதி மிகவும் பாஸிட்டிவ்வாக கூறிய தகவல் சிம்புவின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.