இந்திய சினிமாவில் இதுவரை முறியடிக்கப்படாத சாதனை.. இது பண்ணியது யாரடி நீ மோகினி தாத்தாவா..?

by Sathish G |   ( Updated:2023-02-11 14:36:50  )
இந்திய சினிமாவில் இதுவரை முறியடிக்கப்படாத சாதனை.. இது பண்ணியது யாரடி நீ மோகினி தாத்தாவா..?
X

k viswanath

k viswanath

கே. விஸ்வநாத் இந்தியத் திரைத்துறை நடிகரும், இயக்குநரும் ஆவார். இவர் தெலுங்குத் திரைப்படத்துறையில் எண்ணற்ற படங்களை இயக்கியும் நடித்தார். அத்துடன் தமிழ், இந்தி, மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்தார். இவர் இயக்கிய படமான சங்கராபரணம்(1979), சலங்கை ஒலி (1983), சிப்பிக்குள் முத்து (1985) ஆகியவை '100 சிறந்த திரைப்படங்கள்' பட்டியலில் இடம் பெற்றுள்ளன.தமிழ், தெலுங்கு மற்றும் இந்தித் திரைப்படத் துறையில் கே. விஸ்வநாத் ஆற்றிய பணிகளைப் பாராட்டி தாதாசாகெப் பால்கே விருது (2016) வழங்கப்பட்டது.

kamal hasan and viswanath

ஆஸ்கர் விருதுகளில் போட்டி போடுவதற்கு இந்தியாவிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரு படத்தை இயக்கியவர். மற்றும் ஐந்து தேசிய விருதுகள் 10 ஃபிலிம் ஃபேர் விருதுகளையும் வென்றவர். பெருமைக்குரியவர் இயக்குனர் கே.விஸ்வநாத். இவரை உத்தமவில்லன் மற்றும் யாரடி நீ மோகினி படங்களில் நடித்தவராக தான் தெரியும். ஆனால் நல்ல கருத்துகளை சொல்லி விமர்சன ரீதியாகவும் வசூல் பெற்ற பல படங்களை இயக்கிய இயக்குனர் ஆவார் . அவர் இயக்கிய சங்கராபரணம் இப்படம் நான்கு மொழியில் வெளியாகி நான்கு தேசிய விருதுகளை வென்றது. இசாதனையை இன்று வரை எந்த தெலுங்கு படமும் முறியடிக்க வில்லை .

k viswanath

பின்பு உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான சாகர சங்கமம் அது தமிழில் சலங்கை ஒலி என்னும் பெயரில் வெளிவந்தது. இதில் சுவாதி முத்யம் 59ஆவது ஆஸ்கர் வருது போட்டியாக இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட படமாக இருக்கிறது. அதேபோல் 1995இல் கமல்ஹாசன் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்கும் பொழுது இவரை முதன்முதலாக நடிகராக அறிமுகப்படுத்துகிறார். மேலும் தமிழில் குருதிப்புனல் படத்திலும் நடிகராக அறிமுகப்படுத்துகிறார். அதில் துப்பாக்கியை வாயில் வைத்துக் கொண்டு தற்கொலை செய்யும் கேரக்டரில் நடித்திருப்பார். இவர் எஸ். பி பாலசுப்பிரமணியனின் நெருங்கிய உறவினரும் ஆவார். இவர் கடந்த 2ம் தேதி உயிரிழந்தார்.

Next Story