‘ஐ என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா’.. இந்த காமெடி சீன் எப்படி வந்தது தெரியுமா?.. ரகசியத்தை பகிர்ந்த இயக்குனர்..
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரைக்கும் காலத்தால் அழியாத சில காவியங்களாக என்றுமே நம் மனதில் நிலைத்து நிற்கும் படங்களுக்கு முக்கிய காரணமாக இருப்பது ஒன்று படத்தில் அமைந்த பாடல்களாக இருக்கலாம் அல்லது நகைச்சுவை சீன்களாக இருக்கலாம், இதையெல்லாம் தாண்டி தான் படத்தின் கதை அமையும்.
இன்றும் கரகாட்டக்காரன் படம் என்றால் முதலில் நம் நியாபகத்திற்கு வருவது ‘வாழைப்பழம்’ காமெடி தான். அந்த அளவுக்கு அந்த நகைச்சுவை காட்சிகளை இன்றளவும் நாம் ரசித்து சிரித்து மகிழ்கிறோம். இதே போல ‘பெட்ரமாஸ் லைட்’ காமெடி, வடிவேலுவின் ‘இந்தா ஓடிட்டேன்ல’ காமெடி என வயிறு குலுங்க சிரிக்க வைத்த பல காட்சிகளை இன்றும் நாம் மீம்ஸ்களாக பார்த்து மகிழ்கிறோம்.
அதே போல் தமிழ் நாடு மட்டுமில்லாமல் இந்திய அளவில் இருக்கும் எல்லா கணவன்மார்களுக்கும் விருப்பப்பட்ட காமெடியாக அமைந்தது அக்னி நட்சத்திரம் படத்தில் ஜனகராஜ் கூறும் ‘ஐ என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா’ என்ற நகைச்சுவை கலந்த அந்த சீன் தான்.
இந்த ஒரு நகைச்சுவையை வைத்து பல ஆண்மார்கள் தங்கள் ஸ்டேட்டஸ்களில் தன் மனைவி ஊருக்கும் போன மறு
வினாடியே இந்த ஒரு வசனத்தை வைத்து தங்களுக்குள்ளாகவே மகிழ்ச்சியடைந்து கொள்கிறார்கள். அப்படி பெருமை வாய்ந்த காமெடி எப்படி உருவானது என்று மணிரத்தினத்திடம் உதவியாளராக இருந்தவரும் இயக்குனருமான கண்ணன் என்பவர் கூறினார்.
அக்னி நட்சத்திரம் படத்தை இயக்கியதே மணிரத்னம் தான். ஒரு சமயம் மணிரத்தினத்தின் புன்னகை என்ற சீரியல் பிரபலமாக ஓடி 100 நாள் வெற்றி விழாவை கொண்டாடிய சமயம் அது. அப்போது அந்த விழாவில் மணிரத்தினத்திடம் இந்த காமெடியை பற்றி கண்ணன் கேட்டிருந்தார்.
இதையும் படிங்க : ஓ அதுல அண்ணன் வீக்கா?.. ‘ஆயுத எழுத்து’ படத்தில் சூர்யாவிற்கு உதவி செய்த கார்த்தி!..
அதாவது ‘அந்த நகைச்சுவை காட்சியில் அமைந்தது போல நீங்களும் உங்கள் மனைவி ஊருக்கும் போயிட்டா சந்தோஷப்படுவீர்களா?’என்று கேட்டார். அதற்கு மணிரத்தினம் ‘நிச்சயமாக ஆமாம் சந்தோஷப்படுவேன், அது என்னோட கேரக்டர் தான்’ என்று சொல்லியிருக்கிறார். அப்போ இவரின் கதாபாத்திரமாகத் தான் ஜனகராஜ் பிரதிபலித்திருக்கிறார் என்று அவர் சொன்னதில் இருந்து தெரிகிறது.