latest news

கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட கேம் பிளே ஃபர்ஸ்ட் லுக்…

இங்கிரெடிபிள் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் அடுத்த படமான கேம் பிளே படத்தின் பட ஃபர்ஸ் லுக் வெளியானது

2019ம் ஆண்டு பரத் நடித்து வெளியான காளிதாஸ் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இங்கிரெடிபிள் புரொடக்ஷன்ஸ் தனது அடுத்த தயாரிப்பாக கேம் பிளே என்ற படத்தினை தயாரிக்கிறார்கள். அக்சன் திரில்லர் படமான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார்.

நாளைய இயக்குனர் Season 1–4 நிகழ்ச்சியை இயக்கியவர் சிவநேசன். இவர் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பைனான்ஸியல் க்ரைமை மையமாகக் கொண்ட இப்படம், நொடிக்கு நொடி எதிர்பாராத திருப்பங்களைக் கொண்ட சஸ்பென்ஸ் இன்வஸ்டிகேசன் திரில்லராக உருவாகி வருகிறது. இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்ததிலிருந்து மாறுபட்ட களம் மற்றும் கதை அமைப்புடன், பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கும் வகையில் இப்படம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

Exit is an Illusion என்ற டேக் லைனுடன் வெளியிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், கண்ணாடி சிதறல்களாக உடைந்த தெறிக்க, கதையின் முக்கிய கதாப்பாத்திரங்கள் பல்வேறு உணர்வுகளுடன் காட்சியளிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வித்தியாசமான போஸ்டர், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது.

நடிகர்கள் கிஷோர் மற்றும் HeartBeat சீரிஸ் புகழ் சாருகேஷ் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் ஷாலி நிவேகாஸ், வினோத் கிஷான் மற்றும் சார்லி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.


இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததை அடுத்து, தற்போது இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

2 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

4 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

4 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

5 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

6 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

12 hours ago