அப்பாவுக்கே அல்வா கொடுத்த தனுஷ்!. இளையராஜா பயோபிக்கில் பல்பு வாங்கிய கஸ்தூரி ராஜா!..
சினிமாவில் ஒரு பழக்கம் உண்டு. ஒரு பிராஜெக்டை அதாவது ஒரு இயக்குனரை தயாரிப்பாளர சந்திக்க வைத்து அவரின் கதையை படமாக்கும் வேலையை செய்து கொடுத்துவிட்டால் சம்பந்தப்பட்டவருக்கு அந்த இயக்குனர் கமிஷன் கொடுப்பார். அதேபோல், ஒரு நடிகரின் கால்ஷீட்டை ஒரு தயாரிப்பாளருக்கு ஒருவர் வாங்கி கொடுத்தால் அவருக்கு தயாரிப்பாளரே கமிஷன் கொடுப்பார்.
இது நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் மட்டுமில்லை. சினிமாவில் வேலை செய்யும் எல்லோருக்கும் இது பொருந்தும். கணிசமான நபர்கள் இந்த வேலையை செய்து சம்பாதித்து கொண்டுதான் இருக்கிறார்கள். இது சினிமா துவங்கியதிலிருந்து நடந்து வருகிறது. இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை கதையை படமாக எடுக்கவுள்ளனர்.
இதையும் படிங்க: ரஜினி யாரையும் நம்ப மாட்டார்!.. ஒன்லி ஒன் மேன் ஷோ!.. அவரின் சீக்ரெட் சொன்ன தயாரிப்பாளர்!..
இதில் தனுஷ் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். மேலும், கேப்டன் மில்லர் பட இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்கவுள்ளார். அதோடு, இந்த படத்திற்கு கமல்ஹாசன் திரைக்கதை எழுதவிருக்கிறார். ஒருபக்கம், ‘இளையராஜாவின் கதையை எடுக்க அருண் மாதேஸ்வரன் எப்படி செட் ஆவார்?’ என பலரும் சமூகவலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அதன்பின்னர்தான், இயக்கத்தின் முக்கிய வேலைகளை தனுஷே செய்யவிருக்கிறார். அருண் மாதேஸ்வரன் தனுஷுக்கு உதவியாக மட்டுமே இருப்பார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், இப்படம் தொடர்பான ஒரு செய்தி வெளியே கசிந்திருக்கிறது. இப்படத்தை கனெக்ட் மீடியா மற்றும் பீகே பிரைம் புரடெக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளது.
இதையும் படிங்க: இன்னும் 10 நாட்கள் விட்டிருந்தால் உயிரே போயிருக்கும்!.. ரஜினிக்கு கெடு விதித்த டாக்டர்கள்!…
2 மாதங்களுக்கு முன்பு கஸ்தூரி ராஜாவை தொடர்பு கொண்ட தயாரிப்பு நிறுவனம் இளையராஜாவின் கதையை நாங்கள் படமாக எடுக்க திட்டமிட்டிருக்கிறோம். நீங்கள் தனுஷுடன் பேசி சம்மதிக்க வைத்தால் உங்களுக்கு என்ன கொடுக்க வேண்டுமோ அதை கொடுத்துவிடுகிறோம் என சொல்லி இருக்கிறார்கள்.
ஆனால், 2 மாதம் ஆகியும் அவரிடமிருந்து சாதகமான பதில் இல்லை. எனவே, மரியான் பட இயக்குனர் பால்கி மூலம் தனுஷை பிடித்து இந்த பிராஜெக்டை டேக் ஆப் செய்துவிட்டது தயாரிப்பு நிறுவனம். இது தெரியாமல் சில நாட்களுக்கு முன்பு தனுஷிடம் இது பற்றி கஸ்தூரி ராஜா பேச ‘நாங்கள் ஏற்கனவே பேசி முடித்துவிட்டோம். வேலைகள் போய்க்கொண்டிருக்கிறது’ என சொல்ல ‘வடை போச்சே’ என ஃபீல் பண்ணி கொண்டிருக்கிறாராம் கஸ்தூரி ராஜா.