இவர்தான் ஹீரோ.. இல்லனா எனக்கு வாய்ப்பே வேண்டாம்!. கொடுத்த வாக்கை மீறாத இயக்குனர்!..

by amutha raja |
MR Radha
X

MR Radha

தமிழ் சினிமா வளர்ச்சிக்கு இயக்குனர்களின் பங்கு என்பது மிகவும் இன்றியமையாததாகும். ஒரு படத்தின் வெற்றியை தீர்மானிப்பது அப்படத்தின் இயக்குனரின் கைகளில்தான் உள்ளது. சில இயக்குனர்கள் காலம் கடந்தாலும் மக்களின் மனதில் நிலைத்து நிற்பர்.

அப்படிப்பட்ட இயக்குனர்களில் ஒருவர்தான் இயக்குனர் பஞ்சு. இவர் ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி பின் அந்த அனுபவங்களின் அடிப்படையில் சினிமாவில் இயக்குனராய் வலம் வர ஆரம்பித்தார். கிருஷ்ணன் என்பவருடன் இணைந்து பல படங்களை இயக்கியிருக்கிறார். கிருஷ்ணன் - பஞ்சு என டைட்டில்களின் இவர்கள் பெயர் வரும். இவர்கள் இயக்கிய முதல் படம் பூம்பாவை.

இதையும் வாசிங்க:சிவாஜிக்கு மட்டும் தரீங்க… எனக்கும் வேணும்.. எம்.ஜி.ஆரிடம் அடம் பிடித்து வாங்கிய நம்பியார்..!

பின் பராசக்தி, ரத்த கண்ணீர், தெய்வ பிறவி போன்ற பல திரைப்படங்களை இயக்கியுள்ளனர். தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் பல திரைப்படங்களை இயக்கியுள்ளனர். மேலும் உயர்ந்த மனிதன், எங்கள் தங்கம் போன்ற பல வெற்றிப்படங்களையும் இயக்கியுள்ளனர். இதில், பராசக்தியும், ரத்தக்கண்ணீர் படமும் காலம் கடந்து இப்போதும் பேசப்பட்டு வருகிறது.

krishnan panju

இயக்குனர் பஞ்சு குமாஸ்தாவின் பெண் எனும் திரைப்படத்தில் உதவி இயக்குனராய் பணியாற்றியபோது அப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவரான கே.ஆர்.ராமசாமியுடன் நட்பு வைத்துள்ளார். அப்போது கே.ஆர்.ராமசாமியிடம் பஞ்சு என்றாவது எனக்கு படத்தினை இயக்குகின்ற வாய்ப்பு வந்தால் உங்களைதான் கதாநாயகனாக நடிக்க வைப்பேன் என கூறினாராம்.

இதையும் வாசிங்க:வீட்டை விட்டு வெளியே துரத்திய உறவினர்!.. நடுத்தெருவில் நின்ற ஜெயலலிதா.. காப்பாற்றிய நடிகர்…

ஆனால் ஒரு காலத்தில் இவர் இயக்குனராகும் காலமும் வந்துள்ளது. அப்படி இவர் இயக்கிய திரைப்படம்தான் பூம்பாவை. இப்படத்தில் இவர் நடிகர் கே.ஆர்.ராமசாமியை கதாநாயகனாக நடிக்க வைக்க வேண்டும் என இப்படத்தின் தயாரிப்பாளரிடம் கேட்டாராம். ஆனால் தயாரிப்பாளருக்கோ அதில் இஷ்டம் இல்லையாம்.

என்னதான் தன்னுடைய முதல் படமாக இருந்தாலும் தயாரிப்பாளரிடம் தைரியமாக ‘அப்படி கே.ஆர்.ராமசாமியை கதாநாயகனாக நடிக்க வைக்கவில்லை என்றால் தான் அப்படத்தில் இருந்து விலகி கொள்கிறேன்’ என கூறிவிட்டாராம். பின் தயாரிப்பாளரும் கே.ஆர்.ராமசாமியை நடிக்க வைக்க ஒப்பு கொண்டாராம். தான் ஒரு நேரத்தில் கொடுத்த வாக்கிற்காக தனது முதல் படத்தையே தூக்கி போடும் அளவிற்கு பஞ்சு நேர்மையாக இருந்துள்ளார்.

இதையும் வாசிங்க:மனோரமா நடித்த வேடத்தில் நடிக்க பயந்த பானுமதி!.. கடைசியில் நடந்தது இதுதான்!…

Next Story