Cinema History
இளையராஜாவிடம் தேவா பாட்ட பாடி மெட்டு கேட்ட இயக்குனர்!.. என்னாச்சி தெரியுமா…
“சாமானியன்” படவிழாவில் பங்கேற்ற இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்திருந்தார். பல சந்தர்ப்பங்களில் ராமராஜனே தன்னை காப்பாற்றியவர் என்றும் கலகலப்பாக கூறியிருந்தார்.
ஒருமுறை தனது படத்தில் இளையராஜா இசையமைக்க அதற்கு ‘மெட்டு’ அமைக்கும் போது நடந்த ‘திகில்’ கலந்த சுவாரசியத்தை சொல்லியிருக்கிறார். எப்படிப்பட்ட ‘மெட்டு’ வேண்டும் என்று இளையராஜா கேட்க “புருஷலட்சணம்” படத்தில் வரும் “கோலவிழியம்மா”, “ராஜகாளி அம்மா” பாட்டு மாதிரியே வேண்டும் என்று வெள்ளந்தியாக சொன்னாராம் ரவிக்குமார்.
இதனை கேட்ட இளையராஜா சிரித்துக்கொண்டே சென்றாராம். அப்பொழுது அருகில் இருந்த தயாரிப்பாளர் சரவணன், “சார் அந்த பாட்டு தேவா மெட்டுப்போட்டது”, நீங்க இந்த பாட்ட ஏன் உதாரணமாக சொன்னீங்க என கேட்டிருக்கிறார்.
அதனால என்ன?, அது என் படம் தானே என சொல்ல, அதற்கு சரவணன் இருவரும் சமகால எதிரிகளாக இருந்து வருகின்றனர். நீங்க எம்.எஸ்.விஸ்வநாதான் அல்லது வேறு யார் பாடலையோ உதாரணமாக சொல்லவேண்டியது தானே என்று அறிவுறுத்தியிருக்கிறார்.
அடுத்த முறை இளையராஜாவிடம் ‘மெட்டு’ கேட்டு சென்ற பொழுது பழைய சம்பவத்தை மனதில் வைத்துக்கொண்டு சுதாரித்து கொண்டதாக சொன்னார். “கரகாட்டக்காரன்” படத்தில் வரும் ‘மாங்குயிலே, பூங்குயிலே’ பாடல் மாதிரி வேணும்னு சொன்னேன். அதற்கு “ம்’ என்று மட்டும் சொல்லிவிட்டு சென்றாராம்.
அடுத்த நொடியே மெட்டு தயார் என அழைத்தாராம். அப்படி கிடைத்த பாடல் தான் செல்வா, கனகா, நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன ‘மல்லிகை மொட்டு, மனசத்தொட்டு இழுக்குதடி மானே” பாடலாம். “சக்திவேல்” படத்தின் வெற்றிக்கான முக்கியமான அம்சங்களில் ஒன்றாக மாறியதும் இந்த பாடல் தான்.
இப்படி என்ன செய்வது என்று தெரியாமல் வசமாக மாட்டிக்கொண்ட நேரத்தில் பாடலின் வடிவத்தில் வந்து காப்பாற்றியதோடு மட்டுமல்லாமல் மிகசிறப்பான பாடல் ஒன்று கிடைக்க காரணமாகவும் இருந்தவர் ராமராஜன் என்றும் மகிழிச்சி பொங்க கூறினார் கே.எஸ்.ரவிக்குமார்.