தமிழ் சினிமாவே வேணாம் போங்கடா!. கன்னட சினிமா பக்கம் ஒதுங்கிய ஜெயம் ரவி பட இயக்குனர்!..

ஜெயம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் ரவி. ஜெயம் படத்தை இயக்கியது இவரின் அண்ணன் ராஜா. துவக்கத்தில் தெலுங்கு படங்களை ரீமேக் செய்து தனது அண்ணனின் இயக்கத்தில் நடித்து வந்த ஜெயம் ரவி, ஒருகட்டத்தில் மற்ற இயக்குனர்களின் படங்களிலும் நடிக்க துவங்கினார்.

திரையுலகில் பல புதிய இயக்குனர்களின் முதல் படத்தில் நடித்தவர் ஜெயம் ரவியாக இருப்பார். அதில் பல படங்கள் வெற்றியும் பெற்றது. ஜெயம் ரவியை வைத்து படம் எடுத்தால் கையை கடிக்காது என்கிற நிலையில் அவரின் மார்க்கெட் இருக்கிறது. அதேநேரம், பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் இவர் நடித்து வெளியான கோமாளி திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றது.

இதையும் படிங்க: அப்பா வேலைய பாக்க போய் தன் படத்துக்கே ஆப்பு வைத்த ஜெயம் ரவி!. இதெல்லாம் தேவையா செல்லம்!..

அதேபோல், அண்ணனின் இயக்கத்தில் அவர் நடித்து வெளியான தனி ஒருவன் திரைப்படம் ரூ.60 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. ஜெயம் ரவியை வைத்து ரோமியோ ஜூலியட் படத்தை இயக்கியவர் லக்‌ஷ்மணன். இதுதான் அவருக்கு முதல் படம். இப்படத்தில் ஜெயம் ரவியுடன் ஹன்சிகா மோத்வானி, பூனம் பாஜ்வா என பலரும் நடித்திருந்தனர்.

இப்படம் 2015ம் வருடம் வெளியானது. அதன்பின் மீண்டும் ஜெயம் ரவியை வைத்து போகன் என்கிற படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் அரவிந்த்சாமியும் நடித்திருப்பார். இந்த படம் ஓடவில்லை. அடுத்து மீண்டும் ஜெயம் ரவியிடமே கால்ஷீட் வாங்கி ‘பூமி’ எனும் படத்தை இயக்கினார். கருத்து சொல்கிறேன் என ஆரம்பித்து விவசாயத்தின் பெருமை பற்றி அப்படத்தில் பேசியிருந்தார். ஆனால், அந்த படம் படுதோல்வி அடைந்தது.

இதையும் படிங்க: சூர்யா படத்திலிருந்து வெளியேறிய நடிகை ஜெயம் ரவி படத்தில்!.. நடிகைக்கு மார்க்கெட் அப்படி!..

பூமி படம் சமூகவலைத்தளங்களில் கடுமையாக விமர்சனத்தை சந்தித்தது. நெட்டிசன்கள் பலரும் லக்‌ஷ்மணை வச்சு செய்து அவரை ஒருவழி ஆக்கிவிட்டனர். எனவே, அவருக்கு எந்த நடிகரும் கால்ஷீட் கொடுக்கவில்லை. அவ்வளவு ஏன்?.. ஜெயம் ரவியே அவருக்கு மீண்டும் கால்ஷீட் கொடுக்கவில்லை.

இந்நிலையில்தான், தற்போது ஒரு கன்னட படத்தை லக்‌ஷ்மன் இயக்கவுள்ளார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் கர்நாடகாவின் முன்னாள் முதல் குமாரசாமின் மகன் நிகில் குமாரசாமி ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நான் சொன்னா கேக்குற ஆளா இயக்குனர்!.. விரக்தியடைந்த ஜெயம் ரவி.. ஆறுதல் கூறிய சிம்பு!

 

Related Articles

Next Story