சினிமாவில் அடி எடுத்து வைப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. அதற்கெல்லாம் கிரியேட்டிவ் மைண்ட் அதிகமாக இருக்க வேண்டும். அதிலும் இயக்குனர் என்றால் முதலில் கதை சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். அதற்கு அப்புறம் அசிஸ்டண்ட் டைரக்டராக பணிபுரிந்திருக்க வேண்டும்.
அந்த அனுபவத்தைக் கொண்டு தான் இயக்குனராக முடியும். ஆனால் ஆச்சரியமாக…அசிஸ்டண்ட் டைரக்டராக இல்லாமலேயே டைரக்ட்டா டைரக்டரானவர் தான் லோகேஷ் கனகராஜ். இவரது வெற்றியின் பின்னணியைப் பார்ப்போம்.
முதல் படம் ரிலீஸ் ஆக 4 வருஷம். 2013ல் பதிவு செய்யப்பட்ட கதை. 2017ல் தான் வெளியானது. அந்த அளவு அந்தக்கதை மேல அவருக்கு நம்பிக்கை. செதுக்கி செதுக்கி வைத்தார் கதையை. அதுதான் முதல் படம். மாநகரம்.
பொள்ளாச்சி கோவை ரோட்டில் உள்ள கிணத்துக்கடவு தான் இவரது சொந்த ஊர். சின்ன வயசுல பள்ளிப்பருவத்திலேயே இவருக்குக் கதை சொல்வதில் அலாதி ஆர்வம். பள்ளிக்குப் போகும்போது நண்பர்களிடம் கதை சொல்வார்.
அப்போது எல்லாம் விசிடியில் போட்டுப் படம் பார்ப்பது வழக்கம். அதிலும் அவர் 3 படங்களைத் தான் அடிக்கடி போட்டு பார்ப்பாராம். சத்யா, விக்ரம், டிக் டிக் டிக் என்ற அந்த 3 படங்களுமே உலகநாயகன் கமலின் படங்கள் தான்.
அடிக்கடி கடைக்காரரிடம் வாடகைக்கு இந்தப் படங்களைக் கேட்பாராம் லோகேஷ். ஒரு கட்டத்தில் அவருக்கே டென்ஷன் ஆக இந்த 3 படங்களையும் நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்று கொடுத்து விட்டாராம்.
சின்ன வயசிலேயே கதை சொல்லி படம் பார்த்து வளர்ந்தவர். அப்போதெல்லாம் அவருக்கு அந்த எண்ணம் வரவில்லை. அவர் தனது 20வது வயதில் காலடி எடுத்து வைக்கும் போது தான் அவருக்கு இயக்குனர் ஆக வேண்டும் என்ற எண்ணம் வந்தது.
ஆனால் அவருக்கு அந்த நிலையில் நாம இப்போது படிக்கிறோம்…இதை விட்டுட்டு எங்கே போக? அப்படின்னு எம்பிஏ படிப்பு முடிந்ததும் பேங்க் வேலைக்குப் போயிட்டாரு.
நாலு வருஷமா பேங்க்ல நல்ல வேலை பார்த்தும் அவருக்கு அதில் ஆர்வம் இல்லை. கதை சொல்வதில் தான் ஆர்வம் இருக்கவே அவரது பார்வை சினிமா பக்கம் திரும்பியது. ஆனாலும் அவரால் வேலையை விட முடியவில்லை. குடும்பத்தைப் பார்க்கணுமே என்று நினைத்தார். அதனால் யாருக்கிட்டேயும் அசிஸ்டண்ட் டைரக்டராகவும் ஒர்க் பண்ணவில்லை.
அந்தக் காலகட்டத்தில் தான் குறும்படம் வெளியாகிக் கொண்டு இருந்தது. நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்புராஜ் இவர்களது படம் எல்லாம் வந்தது. இவர்கள் எல்லாம் இந்த குறும்பட வெற்றியைத் தொடர்ந்து சினிமாவில் இயக்குனர்களாகவும் அடியெடுத்து வைத்தார்கள்.
நாமும் இப்படி குறும்படம் எடுத்தால் என்ன என்று நினைத்தார். நண்பர்களும் உற்சாகப்படுத்தினர். வங்கி மேலாளரும் இவருடைய குறும்பட எண்ணத்திற்கு பணம் கொடுத்து உதவி செய்தார்.
இந்த நிலையில் அவருக்குக் கல்யாணமும் வீட்டில் பண்ணி வைக்கிறார்கள். இந்த நேரத்தில் தான் அச்சம் தவிர் என்ற தலைப்பில் சின்ன குறும்படம் எடுத்தார் லோகேஷ்.
இந்தப் படம் குறும்பட விழாவிற்கு செல்லவே அங்கு அவரது படம் வெற்றி வாகை சூடியது. அந்த விழாவிற்கு நடுவராக வந்தவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். அவர் லோகேஷிடம் யோவ்…உங்கிட்ட மேக்கிங் ஸ்டைல் நல்லா இருக்குய்யா…இதை அப்படியே விட்றாத. கண்டினியு பண்ணுன்னு சொல்லித்தான் அந்த அவார்டையே அவருக்கிட்டக் கொடுத்துட்டுப் போனாரு.
அப்புறமா நிறைய கார்ப்பரேட் பிலிம்ஸ் பண்ண ஆரம்பித்தார். அவங்களுக்கு சின்ன சின்ன வீடியோ எடுத்துக் கொடுத்தார். இதன் மூலமாக இவரது மேக்கிங் ஸ்கில்ஸ் இம்ப்ரூவ் ஆனது. அடுத்தது களம் என்ற குறும்படத்தை இயக்கினார். இதைப் பார்த்த எஸ்.ஆர்.பிரபு தம்பி உன் மேக்கிங் ரொம்ப நல்லாருக்கு. கதை இருந்தா சொல்லு. நாம படம் பண்ணலாம்னு சொல்றாரு.
லோகேஷ்சும் ஆர்வத்துடன் வந்து அவருக்கிட்ட 20 நிமிட கதைதான் சொல்றாரு. அது தான் மாநகரம் கதையோட கிளைமாக்ஸ். இந்தக் கதைதான் என்கிட்ட இருக்கு. பிடிச்சா சொல்லுங்க. மிச்சத்தை நான் டெவலப் பண்றேன்னாரு.
கதை நல்லாருக்கு. நீ வேற எங்கயும் போயிறாத. எனக்கு டெவலப் பண்ணி நீ சொல்லுன்னு எஸ்.ஆர்.பிரபு சொல்றாரு. இப்ப முழுக்கதையும் நண்பர்களுடன் ஆலோசித்து ரெடி பண்ணிட்டாரு. இதைப் பதிவும் செய்து கொண்டார். எஸ்.ஆர்.பிரபுவும் ஓகே சொல்லிட்டார். இது நடந்தது 2013ல்.
அந்த நேரம் பூஜை போடுற தேதியும் முடிவாச்சு. அதுக்கு முந்தைய நாளில் தான் வங்கி வேலையை ரிசைன் பண்றாரு. 2014ல் ஆர்டிஸ்ட் செலக்ட் பண்றாங்க. 2015ல் சூட்டிங் ஆரம்பிக்குது. 2016ல் இந்தப் படத்தோட முதல் காபி ரெடியாகுது. 2017ல் தான் இந்தப் படத்தை ரிலீஸ் பண்றாங்க.
இந்த நாலு வருஷமும் இவரைப் பார்த்துக்கிட்டது இவரோட அசிஸ்டண்ட் டைரக்டர்கள்தான். 2017ல் மாநகரம் ரிலீஸ் ஆகுது. படத்திற்கு நல்ல ரிவியூ கிடைக்க படம் மெகா ஹிட்டாகுது. எல்லா இயக்குனர்களும், எல்லா நடிகர்களும் இவரைத் திரும்பிப் பார்க்கிறாங்க.
4 கோணம்….3 பிரச்சனை….2 காதல்னு படம் அட்டகாசமா இருக்கு. இந்தப்படத்தை 415 லொகேஷன்களல் எடுத்துருக்காங்க. இந்தப்படத்துல சின்ன கேரக்டருக்காக ஒரு 6 பேரை தேர்வு செஞ்சாங்க. அதுக்கு 615 பேரை அழைச்சாங்க. இந்த அளவு மெனக்கிட்டு தான் இந்தப்படத்தை இயக்கினார் லோகேஷ் கனகராஜ்.
ஒருநாள் மதிய உணவு வேளைக்கு ஹோட்டல் செல்கிறார். அங்கு நியூஸ் பேப்பரைப் பார்க்கிறார். அதுல இருந்த 2 வரி செய்தி இவருக்கு டச்சிங் ஆகவே அதுவே கைதியாக உருவெடுத்தது. அதற்கு அப்புறம் வந்தவை தான் மாஸ்டர், விக்ரம்.. என பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பிய படங்கள்.
Rajinikanth: அபூர்வ…
தமிழ்த்திரை உலகில்…
நடிகை கீர்த்தி…
புஷ்பா 2…
நடிகர் கவின்…