Connect with us
banner

விக்ரமின் பிரம்மாண்டமான வெற்றிக்கு என்ன காரணம்? உடைத்து சொல்கிறார் லோகேஷ் கனகராஜ்

Cinema History

விக்ரமின் பிரம்மாண்டமான வெற்றிக்கு என்ன காரணம்? உடைத்து சொல்கிறார் லோகேஷ் கனகராஜ்

நாயகன் மீண்டும் வாரான் எட்டுத்திக்கும் பயம் தானே…என்ற கமலின் வருகையை வர்ணித்து பாடிய வரிகளைப் பார்க்கும்போது எந்த ஒரு ரசிகனும் புல்லரித்துப் போவான்.

கமலை அணுஅணுவாக ரசித்த ரசிகனால் தான் இப்படி ஒரு படம் எடுக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டியுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மிகப்பிரம்மாண்டமான வெற்றியையும் வசூலையும் ஈட்டிக் கொடுத்த தமிழ்சினிமா உலகத்தை காலரைத் தூக்கி விட்டு நடக்கச் செய்துள்ளது சமீபத்தில் வெளியான விக்ரம் படம்.

logesh kanagaraj

உலகநாயகன் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில் நடிக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அற்புதமாக இயக்கியுள்ளார்.

தற்போது கூகுளில் அதிகம் தேடப்படும் நபர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான். மாநகரம், கைதி என்று மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து கமலை வைத்து இயக்கிய விக்ரம் படம் தமிழ்சினிமா உலகையே திருப்பிப் போட்டுவிட்டது. வெற்றிக்கே வெற்றி என்று கூட சொல்லலாம். 300 கோடியைத் தாண்டியும் இன்னும் வசூலை வாரி இறைத்துக் கொண்டு இருக்கிறது.

சூப்பர்ஸ்டாரை வைத்து எப்போது படம் எடுக்கப் போகிறீர்களா என்று கேட்டதற்கு லோகேஷ் கனகராஜ் அடுத்து எப்படிப் போதோ அப்படித்தான். எனக்கு ஆசை எல்லாம் இருக்கு. பேராசையே இருக்கு. என்கிறார்.

நடிகர் சம்பத் கூறுகையில் இந்தப்படம் எனக்கு பெரிய பிரேக் கொடுத்துருக்கு. இதுவரைக்கு 15 இன்டர்வியூ கொடுத்திருக்கேன். என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. இந்த வாய்ப்பைக் கொடுத்ததற்காக மிகப்பெரிய நன்றி என இயக்குனர் லோகேஷிடம் சிலாகித்து சொல்கிறார்.

லோகேஷ் கனகராஜ் தனது பேட்டி ஒன்றில் இவ்வாறு கூறுகிறார்.

படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு மேல் அதிக பயம் இல்லை. ஆனால் தோல்வி மேல் அதிக பயம் உள்ளது.

கமல் சாரோட எந்தப்படத்தையும் எந்தக்காலத்திலேயும் நான் ரீமேக் பண்ண மாட்டேன். ஏன்னா அதுல 10 பர்சண்ட் நியாயத்தைக் கூட என்னால செலுத்த முடியாது. அது ஒரு கிளாசிக். அப்படியே இருக்கட்டும்.

kamal and logesh kanagaraj

விக்ரம் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. இதற்கு மிக முக்கிய காரணம் கமல் சார் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்துவிட்டார். இது முழுவதுமே உங்க படமாக இருக்கணும். நான் ஆக்டரா வந்துட்டு போறேன்.

நீ என்ன வேணாலும் பண்ணு. ரசிகர்களுக்குப் பிடித்த படமா இருக்கணும் என்றார் கமல். எனக்கு இந்த மாதிரி படம் பண்றது ரொம்ப இஷ்டம். எல்லாமே அமைஞ்சு வந்ததும் ஒரு காரணம் என்கிறார் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top