Connect with us

எளிமையா இருக்கலாம்! அதுக்குன்னு இந்த அளவுக்கா.. விஜய்யை அதிர்ச்சிக்குள்ளாகிய லோகேஷ்!

Cinema History

எளிமையா இருக்கலாம்! அதுக்குன்னு இந்த அளவுக்கா.. விஜய்யை அதிர்ச்சிக்குள்ளாகிய லோகேஷ்!

வங்கி அதிகாரியாக பணிப்புரிந்து பிறகு சினிமாவில் வாய்ப்பு கிடைத்து தற்சமயம் பெரும் இயக்குனராக இருந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். சாதரண மிடில் க்ளாஸ் மக்களில் இருந்து இவ்வளவு பெரிய உயரத்தை தொட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

எப்போதுமே சிம்பிள்:

பொதுவாக இப்படியான வளர்ச்சியை அடைந்த பிறகு அதிகப்பட்சம் அவர்களது நடை, உடை போன்ற பல விஷயங்களை மாற்றிவிடுவார்கள். ஆனால் விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் பேட்டிகளுக்கு வரும்போது ஒரு கட்டம் போட்ட சட்டையை போட்டுக்கொண்டு சாதரணமாக வருவதை பார்க்க முடியும்.

Vijay

Vijay

எப்போதுமே லோகேஷ் கனகராஜ் சிம்பிளாதான் இருப்பார் என சினிமா வட்டாரத்திலேயே பேச்சுக்கள் உள்ளன. ஆனால் படம் எடுக்கும்போதும் கூட லோகேஷ் அப்படிதான் இருந்துள்ளார். மாஸ்டர் திரைப்பட படப்பிடிப்பின்போது விஜய்யை அதிர்ச்சிக்குள்ளாக்கும் சில நிகழ்வுகளையும் செய்துள்ளார்.

சிம்பிள் போட்டோஷூட்:

மாஸ்டர் படத்தின் போஸ்டருக்காக போட்டோ ஷூட் எடுக்க வேண்டும் என திட்டமிடப்பட்டது. பொதுவாகவே போட்டோ ஷூட் என்றால் லட்சக்கணக்கில் செலவு செய்து வெளி மாநிலத்தில் இருந்து போட்டோகிராபர்களை வரவழைத்து பெரும் செட்டப்பில் போட்டோ எடுப்பார்கள். அதுவும் பெரிய ஹீரோக்கள் படம் என்றால் கேட்கவே வேண்டாம்.

vijay

போட்டோ ஷூட் எடுக்கும் நாளன்று காலையிலேயே லோகேஷ் சொன்ன இடத்திற்கு வந்துள்ளார் விஜய். அங்கு பார்த்தால் ஒரு சின்ன செட்டப் கூடவே ஒரு போட்டோகிராபர் இருந்துள்ளார். விஜய்க்கு அதிர்ச்சியாகிவிட்டது. உண்மையிலேயே போட்டோஷூட்தான் நடக்கிறதா? என ஒரு கேள்வி வந்துவிட்டது.

அந்த அளவிற்கு தேவையில்லாமல் காசு செலவு செய்யாமல் சரியாக படத்தை எடுத்து முடிப்பவராக லோகேஷ் கனகராஜ் இருக்கிறார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top