Cinema News
எனக்கு பக்க பலமே இவர்தான்! எல்லா கேரக்டருக்கும் செட்டாகக் கூடிய ஆள் – லோகேஷ் சொன்ன அந்த நடிகர்?
Lokesh kanagaraj: தமிழ் சினிமாவில் ஒரு சிறப்பான அந்தஸ்தோடு வலம் வந்து கொண்டிருக்கும் இயக்குனர் லோகேஷ். ஒவ்வொரு படங்களிலும் ஒருவித ஹைப்பை ஏற்படுத்துவதே லோகேஷின் வழக்கம்.
ஆனால் இதுவரை 5 படங்களை எடுத்திருக்கும் லோகேஷ் முக்கியமாக போதைப் பொருள், கொலை, கொள்ளை என சமூகத்திற்கு எதிரான ஒரு செயலை பற்றியே படத்தில் காட்டியிருக்கிறார்.
இதையும் படிங்க: லியோவை பாராட்டி டிவிட்!.. இது கேஜிஎஃப் பட இயக்குனர்தானா?!. அங்கதான் இருக்கு டிவிஸ்ட்…
இதை குறிப்பிட்டு கூட சில ஊடகவியலாளர்கள் எப்பொழுது ஒரு தரமான நல்ல கருத்துக்களை உடைய படங்களை மக்களுக்கு கொடுக்கப் போகிறீர்கள் என்றும் அவரிடம் கேட்டு விட்டனர். இந்த நிலையில் பல சேனல்களுக்கு பேட்டி கொடுத்த லோகேஷ் பல சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்திருக்கிறார்.
அந்த வகையில் அவரின் 9 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் லியோவை சேர்த்து மொத்தம் 5 படங்களை எடுத்திருக்கும் லோகேஷுக்கு மிக முக்கிய பலமாக இருந்தவரை பற்றி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: நாலு மாநிலத்திலுமே லியோவுக்கு பல்புதானாம்.. பிரபல திரை விமர்சகரின் அதிர்ச்சியான ட்வீட்..!
அவர் வேறு யாருமில்லை. கைதி படத்தில் லாரிக்கு பின் இருந்து எதிராளிகளிடம் துப்பு சொல்லி வரும் ஒரு போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் அருண் அலெக்ஸாண்டர் தானாம். அவர் இப்போது இல்லை. இறந்துவிட்டார்.
அவரை பற்றி குறிப்பிட்டு பேசிய லோகேஷ் ‘ஒரு சில பேர மட்டும்தான் எல்லா கேரக்டருக்கும் என்னால எழுத முடியும். எல்லாவற்றையும் அவர்களை வைத்து யோசிக்க முடியும். இந்த 9 வருடத்தில் 4 படங்களையும் தாண்டி ஒரு 5. 6 கதைகளை முழுவதுமாக எழுதியிருப்பேன். ’
இதையும் படிங்க: செகண்ட் ஆப்-ல காணாம போன லோகேஷ் கனகராஜ்!. காப்பாத்திய அனிருத்!.. அவர் மட்டும் இல்லனா?!….
‘அந்தக் கதைகளில் எல்லா கேரக்டருக்கும் ஒரே ஆள மட்டும் வச்சு பாத்துக் கொண்டே இருப்பேன் என்றால் அதுக்கு சரியாக பொருந்தக் கூடிய ஆள் அருண் அலெக்ஸாண்டர். வில்லனாகவும் சரி காமெடியாகவும் சரி எந்த கேரக்டரானாலும் இவர் செட் ஆவார்.’
‘இவர வச்சே பல கேரக்டர்களுக்கு கதை எழுதியிருவேன். என்னுடன் மாநகரம் முதல் படத்தில் இருந்து மாஸ்டர், கைதி வரை கூடவே பயணித்தவர். அண்ணா என்றுதான் அழைப்பேன்.ஆனால் இப்பொழுது அவர் இல்லை’ என்று அருண் அலெக்ஸாண்டரை பற்றி கூறினார்.