Connect with us
sandy master

Cinema News

லியோ படுத்திய பாடு!. பெத்த புள்ளையையே பயம்காட்டிய சாண்டி மாஸ்டர்!..

Sandy Master: சாண்டி மாஸ்டர் தமிழ் சினிமாவின் நடன ஆசிரியர்களில் ஒருவர். இவர் பல திரைப்படங்களில் நடன ஆசிரியராய் பனியாற்றியுள்ளார். இவர் கலா மாஸ்டரின் தீவிர ரசிகர். கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகிய மானாட மயிலாட நிகழ்ச்சியில் முதன்முதலில் கலந்து கொண்டார். பின் பல மேடை ஷோக்களின் மூலம் தனது திறமையை மற்றவர்கள் முன் நிரூபித்தார்.

மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்னமும் பிரபலமடைந்தார். தான் இருக்கும் இடத்தினை கலகலப்பாக வைத்து கொள்வதில் சாண்டியை மிஞ்ச ஆள் இல்லை என்றுதான் கூறவேண்டும். மேலும் இவர் மென்மையான குணம் கொண்டவர். பிரச்சினை உள்ள இடத்திலிருந்து விலகியே இருப்பார்.

இதையும் வாசிங்க:எல்லா கோட்டையும் அழிங்க… இதுதான் ஃபைனல்.. ஒருவழியாக அறிவித்த லியோ படக்குழு..!

பிக் பாஸின் மூலம் இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். மேலும் இவரின் துள்ளல் மிகுந்த ஆட்டமும், இவரின் காமெடியான பேச்சுகளும் மக்களை இவர் வசம் இழுத்தன. இவர் காலா, தில்லுக்கு துட்டு 2, விக்ரம் போன்ற பல படங்களில் நடன ஆசிரியராக இருந்துள்ளார்.

இவருக்கு ஒரு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளன. இவரின் பெண் குழந்தையை நாம் பிக்பாஸில் கூட பார்த்திருக்க முடியும். இவர் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில் சாண்டியை பார்க்கும் போது ‘இவரா சாண்டி?’ என அனைவரும் எண்ணும்படி இருந்தது. இந்த கதாபாத்திரத்தின் போட்டோவை படக்குழு அவருக்கு அனுப்பியிருந்ததாம்.

இதையும் வாசிங்க:சஞ்சய் தத்துக்கே இந்த நிலைமைனா!.. திரிஷாவுக்கு?.. லியோ படத்தில போய் இப்டி செஞ்சிட்டீங்களே?

அதனை தனது பெண் குழந்தையிடம் காட்டி இது யார்? என கேட்டுள்ளார். அதற்கு அந்த குழந்தை இது பேய் என கூறி பயந்துவிட்டதாம். மேலும் அந்த சீனில் அவரே அவரை பார்க்கும்போது அய்யோ இந்த முகத்தைதான் பெரிய திரையில் காட்ட போகிறார்களா? என கடுப்பாய் இருந்ததாம்.

ஆனால் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இவரின் பல்லில் அடிபடும் சீன் மற்றும் அர்ஜுனின் முகத்தில் ரத்தம் வடிவது போன்ற சீன்களுக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ்தான் மேக்கப் போடுவார் என ஒரு தகவலை பகிர்ந்தார். மேலும் இப்படத்தில் சாண்டியை நாம் யாரும் இதுவரை பார்க்காத ஒரு கதாபாத்திரத்தில் பார்க்கலாம் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதையும் வாசிங்க:கவுதம் மேனனுக்கு சம்பளம் இத்தனை கோடியா?!.. பேசாம டைரக்‌ஷனை விட்டு நடிகராவே மாறிடலாம்!..

google news
Continue Reading

More in Cinema News

To Top