என் படத்தை கலாய்க்க வந்தா இதுதான் நடக்கும்!.. தெறிக்கவிட்ட விடாமுயற்சி இயக்குனர்!...

by சிவா |   ( Updated:2024-08-17 09:15:21  )
magizh
X

vidamuyarchi: எப்படிப்பட்ட சிறப்பான படமாக இருந்தாலும் தியேட்டரில் அதை கிண்டலடிப்பதற்காகவே சில இளைஞர் கூட்டம் வரும். திரையில் கதாபாத்திரங்கள் செண்டிமெண்ட்டாக உருகி பேசிக்கொண்டிருக்கும் போது சீட்டில் அமர்ந்து கொண்டு அதை நக்கலடித்து கமெண்ட் அடிப்பார்கள்.

இதுபோன்ற அனுபவங்கள் பலருக்கும் இருக்கும். நாம் கதையோடு ஒன்றி படம் பார்க்கலாம் என நினைத்தாலும் அவர்கள் விட மாட்டார்கள். ஒரு கதையை உருவாக்கி பல வருடங்கள் கஷ்டப்பட்டு வாய்ப்பு தேடி இயக்குனராகி ஒரு படம் எடுத்து ரசிகர்கள் படத்தை எப்படி ரசிக்கிறார்கள் என தெரிந்து கொள்வதற்காக தியேட்டருக்கு போய் மொக்கை வாங்கிய இயக்குனர்கள் பலரும் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: தங்கம்னு நினைச்சா அது செங்கலாயிருச்சு! தங்காலனை பங்கம் செய்த இயக்குனர்

மிகவும் கஷ்டப்பட்டு படப்பிடிப்பு தளத்தில் நடிகர், நடிகைகளிடம் வேலை வாங்கி உருகி உருகி ஒரு காட்சியை ஒரு இயக்குனர் உருவாக்கி இருப்பார். ஆனால், தியேட்டரில் அந்த சீனை ரசிகர்களை பயங்கரமாக கலாய்த்துக்கொண்டிருப்பார்கள். இதைப்பார்த்து அப்செட் ஆன அனுபவம் பல இயக்குனர்களுக்கும் இருக்கிறது.

இந்நிலையில், நெகட்டிவ் விமர்சனங்கள் பற்றி விடாமுயற்சி பட இயக்குனர் மகிழ் திருமேனி ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘சில பேர் படத்தை கலாய்ப்பதற்கென்றே தியேட்டருக்கு வருவான். அப்படி பட்டவங்களை அமைதியாக்கி நீங்க உட்கார வச்சீட்டிங்கன்னா நீங்க ஜெயிச்சீங்க. நான் இயக்கிய ‘தடையற தாக்க’ படத்துக்கு வேற படத்துக்கு டிக்கெட் கிடைக்காமதான் உள்ள வந்தாங்க..

கொஞ்சம் நேரம் கலாய்ச்சிட்டே இருந்தானுங்க.. அதுக்கு அப்புறம் படம் நகர நகர அமைதியா ஆயிட்டானுங்க’ என சொல்லி இருக்கிறார். மகிழ் திருமேனி தடையற தாக்க, மிகாமின், தடம் போன்ற திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். அதன்பின் உதயநிதியை வைத்து கலக தலைவன் என்கிற படத்தையும் இயக்கினார்.

இப்போது அஜித்தை வைத்து விடாமுயற்சி படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களாக நடந்து தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. விடாமுயற்சி திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க: கொட்டுக்காளி விழாவில் மிஷ்கின் வேணும்னே பேசினாரா? எதுக்கு இந்த அலப்பறை?

Next Story