Cinema News
மோகனிடம் கேட்கக் கூடாத கேள்வியை கேட்டு வாங்கிக் கிட்ட இயக்குனர்! அவரிடம் இந்த கேள்வியை கேட்கலாமா?
Actor Mohan: 80களின் கனவு நாயகனாக வலம் வந்தவர் நடிகர் மோகன். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் மேடைகளில் பாடுவது மாதிரியான கதாபாத்திரங்களை மையமாகவே அமைந்திருக்கும்.அதனாலேயே மைக் மோகன் என அழைக்கப்பட்டார்.
மோகன் படம் என்றாலே அவருடைய தனித்துவமான அந்த குரல்தான் நம் நியாபகத்திற்கு வந்து போகும். ஆனால் அது அவருடைய சொந்தக் குரலே இல்லை. பெரும்பாலான படங்களில் மோகனுக்கு வாய்ஸ் கொடுத்ததே விஜயின் தாய்மாமனான சுரேந்தர்தான்.
இதையும் படிங்க: இதனால் தான் சிம்பு மீண்டும் ப்ரேக்கில் இருக்கார்.. மன்மதன் படத்தினை தொடர்ந்து STR48ல் நடக்க இருக்கும் விஷயம்…!
அவர் ஒரு சிறந்த பாடகரும் கூட. ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கும் மோகனுக்கும் ஏதோ ஒரு பிரச்சினை காரணமாக தன் சொந்தக் குரலாலேயே வசனம் பேச ஆரம்பித்தார்.கிட்டத்தட்ட 74 படங்களுக்கு சுரேந்தர் மோகனுக்காக வாய்ஸ் கொடுத்திருக்கிறாராம்.
ஹீரோவாக நடிக்க தொடங்கி முதல் மூன்று வருடங்களில் அதிக நாள்கள் ஓடிய திரைப்படமாக மோகனின் திரைப்படங்கள்தான் முதலிடத்தில் இருந்திருக்கின்றன. இந்த நிலையில் இயக்குனரும் பத்திரிக்கையாளருமான மணி பாரதி சமீபத்தில் ஒரு பேட்டியில் மோகனுடனான தன் அனுபவங்களை பற்றி கூறினார்.
இதையும் படிங்க:பாட்டியிடம் இருந்து பாடத்தைக் கற்ற எம்ஜிஆர்… கொடை வள்ளலாக இதுதான் காரணமா…?!
அதாவது ஆரம்பத்தில் பத்திரிக்கையாளராக சேர்ந்த புதிதில் முதன் முதலில் பேட்டி எடுத்த நடிகர் மோகன் தானாம். அதனால் கேள்விகளை எப்படி கேட்க வேண்டும் என்று மணிபாரதிக்கு தெரியாததாம். அதே நேரம் மோகனின் தொடர் சில படங்கள் தோல்விகளைச் சந்தித்த நேரமாம்.
மோகனிடம் உங்கள் எல்லா படங்களும் தோல்விகளையே சந்தித்து கொண்டிருக்கிறதே என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டிருக்கிறார். உடனே மோகன் கோபத்தின் உச்சியில் வெற்றிப் படங்களை பார்த்ததே இல்லையா என்று சரமாரியாக திட்டி விட்டாராம்.
இதையும் படிங்க: இன்னைக்கு நைட்டு நீ தூங்கமாட்ட!.. சைனிங் உடம்பை வேறலெவலில் காட்டும் தர்ஷா…
சரி இரண்டாவதாக உங்கள் சொந்தக் குரலில் எப்போதுதான் பேச போகிறீர்கள்? என்று கேட்டிருக்கிறார், அந்த நேரத்தில்தான் சுரேந்தருக்கும் மோகனுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட சொந்தக் குரலில் பேச ஆரம்பித்திருக்கிறார் மோகன்.
இது தெரியாத எதற்கு பேட்டி காண வந்தீர்கள் என மறுபடியும் திட்டிவிட்டு பேட்டியை இன்னொரு நாள் வைத்துக் கொள்ளலாம் என முடித்துக் கொண்டாராம் மோகன்.