35 வருடங்களைக் கடந்தும் தில் காட்டும் வேலுநாயக்கர்...எப்படி வந்தார்...? சொல்கிறார் மணிரத்னம்
மணிரத்னம் இயக்கத்தில் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பிய படம் நாயகன். ஆறு முதல் 60 வயது வரையிலானவர்கள் பார்த்து ரசித்த படம். இன்று வரை ரசித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
அந்தப் படத்தை இயக்கிய வகையில் அந்த இனிய அனுபவம் எப்படி இருந்தது என்ற கேள்விக்கு இயக்குனர் மணிரத்னம் சொன்ன பதில்கள் இவை.
நாயகன் படத்தைக் குறிப்பாக கமலுக்காக பல தரப்பட்ட மக்கள் பார்த்து ரசித்துருக்காங்க. அவரே இந்த மொத்த படத்தையும் முழுமையாகத் தாங்கிக் கொண்டு சென்று இருக்கிறார் என நினைக்கிறேன். இளையராஜா, தோட்டாதரணி, பி.சி.ஸ்ரீராம், லெனின் என்று சூப்பரான டீம் இருந்தது.
முக்தா ஸ்ரீனிவாசன் ஒரு தடவை வீட்டுக்கு வந்தாரு. வந்து கிழக்கு எதுன்னு கேட்டாரு. அவரு வந்து கையில ஏதோ ஒண்ணு வச்சிருக்காரு. அட்வான்ஸ் தான் கொடுக்கப்போறாருன்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன். அவரு வந்து ஒரு கவர் கொடுத்தாரு.
அதுல ஒரு கேசட் இந்தி விஎச்எஸ். இதை வந்து கமல் உங்களைப் பார்க்க சொன்னாரு. இந்தப் படம் பண்ணனும்னு அவருக்கு ஆசை. அதனால நீங்க பார்க்கணும்னு சொன்னாரு. நான் சொன்னேன். எனக்கு வந்து ரீமேக்ல நான் கரெக்டா இருக்க மாட்டேன்.
அது என்னோட ஸ்ட்ரென்த் இல்ல. இருந்தாலும் நான் பார்க்குறேன். பட் அது இப்படித்தான் இருக்கும்னு சொன்னேன். சோ. பார்த்தேன். ஃபிப்டீன் மினிட்ஸ்க்கு மேல என்னால பார்க்க முடியல. அப்போ எனக்கு அதுல பெரிய ஆர்வம் இல்லை. அடுத்த நாள் வந்தாரு.
அப்பவும் அதையே சொன்னேன். அப்ப அவரு சொன்னாரு. வண்டியில ஏறுங்க. நீங்களே இதை வந்து கமல்கிட்ட சொல்லிடுங்க...சோ...இங்க இருந்து ஏவிஎம் ஸ்டூடியோ வரைக்கும் கூட்டிட்டுப் போனாரு.
அப்போ கமல் சார் சூட்டிங்ல இருந்தாரு. லஞ்ச் டயத்துல மீட் பண்ணினோம். இது வேண்டாம். இது இல்லாட்டி என்ன பண்ணுவீங்கன்னு கேட்டாரு.
ஜேம்ஸ்பாண்டு படம் மாதிரி ஒரு ஆக்ஷன் படத்தைப் பண்ணனும்னு நினைச்சேன். அதே போல வரதராஜ முதலியாரின் ஏற்றமும், இறக்கமும் வைத்து படம் பண்ணலாம்னும் நினைச்சேன். அங்க ஆரம்பிச்சது. சோ...கமல் சார வச்சிக்கிட்டு தான் இந்த படம் முழுவதும் ஆரம்பமானது. அவரை மையமாக வைத்துத் தான் கதை முழுவதும் எழுதப்பட்டது.
முதலில் லொகேஷன் பார்க்கறதுக்காக தாதாவிக்கு போயிருந்தோம். அங்க அவரோட ஆளுங்க தான் எங்களுக்கு ஹெல்ப் பண்ணாங்க. அவரை சந்திக்கப் போனேன். அவரு கூட நடந்த உரையாடல் தான் படத்திற்கு கிளைமாக்ஸா எனக்கு வந்தது. அவரு வந்து அப்போ அன்டர்கிரவுண்டுல இருந்தாரு. இங்க இல்லை.
இது எப்படி எங்கே போகும்னு தெரியாது. ஆனா ஒருத்தரோட லைப்ப ஸ்டார்ட் பண்ணி கொண்டு போக வேண்டியிருக்கு. கமல் சார் வேலு நாயக்கர் என்ற கேரக்டரைத் தான் பார்த்து முழுமையாக உள்வாங்கி நடித்தார். படத்தில் ஜனகராஜ் உடன் கமல் இணைந்து நடித்த நிலா அது வானத்து மேலே என்ற பாடல் தான் கதையை சொன்னது.
1987ல் முக்தா ஸ்ரீனிவாசனின் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான மெகா ஹிட் படம் தான் நாயகன். தற்போது இந்தப்படம் வந்து 35 ஆண்டுகளாகிறது. இன்னும் இதைப்பற்றி சுவாரசியமாகப் பேசி வருகிறோம் என்றால் இந்தப்படத்தின் கதை அப்படி.
குறிப்பாக கமலின் நடிப்பு அற்புதத்திலும் அற்புதம் என்பதே உண்மை. ஒரு தனி நபரின் வாழ்க்கையை பால்ய பருவத்தில் இருந்து அவர் இறக்கும் வரை வெகு தத்ரூபமாகக் கொண்டு சென்றுள்ளார் இயக்குனர் மணிரத்னம் என்பது குறிப்பிடத்தக்கது.