ஐயா மன்னிச்சிடுங்க!. இயக்குனர் மணிகண்டன் வீட்டில் நடந்த திருட்டில் செம டிவிஸ்ட்!..
Manikandan: பொதுவாகவே சினிமாவில் சில சுவாரஸ்ய சம்பவம் நடக்கும். அதுப்போலவே உண்மை சம்பவத்தில் நடக்கும் போது ஆச்சரியமாக தான் இருக்கும். அப்படி ஒரு விஷயம் தான் இயக்குனர் மணிகண்டன் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில் நடந்து இருக்கிறது.
மதுரைக்கு அருகில் உள்ள உசிலம்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன். 2000களின் நடுவில், தமிழ் திரைப்படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக தனது கேரியரை தொடங்கினார். முதலில் சில குறும்படங்களை இயக்கி அங்கீகாரம் பெற்றார். இவர் இயக்கத்தில் விண்ட் என்ற குறும்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
இதையும் படிங்க: சிவக்குமார் வீட்டு குத்துவிளக்கா இது? வர வர குறைஞ்சுக்கிட்டே போகுது.. வைரலாகும் ஜோதிகாவின் வீடியோ
அதை தொடர்ந்து அவருக்கு சினிமாவில் காக்கா முட்டை படத்தினை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படத்தினை தயாரித்தவர் இயக்குனர் வெற்றிமாறன். சின்ன பட்ஜெட்டில் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தது அப்படம். 62 வது சிறந்த குழந்தைகளுக்கான திரைப்படம், சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது என இரண்டு தேசிய விருதுகளை வென்றனர்
இதை தொடர்ந்து விஜய் சேதுபதியை வைத்து ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி படத்தினை இயக்கினார். இதில் கடைசி விவசாயி திரைப்படம் மிகப்பெரிய அளவில் ரீச்சை கொடுத்தது. 69வது தேசிய விருது விழாவில் சிறந்த திரைப்படம் மற்றும் அப்படத்தில் நடித்த முதியவருக்கு ஸ்பெஷல் மென்ஷன் விருது கிடைத்தது.
இதையும் படிங்க: வைரமுத்துவை கழட்டிவிட இளையராஜா பார்த்த வேலை!.. இப்படிப்பட்டவரா இசைஞானி!…
இந்நிலையில் தன்னுடைய அடுத்த பட வேலைகளுக்காக குடும்பத்துடன் இரண்டு மாதமாக மணிகண்டன் சென்னையில் இருக்கிறார். உசிலம்பட்டியில் இருந்த அவர் வீட்டில் இருந்து 5 பவுன் நகை, ஒரு லட்சம் ரொக்கத்துடன் அவரின் தேசிய விருதும் கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த செய்தி பரபரப்பானது. தேசிய விருதை கொள்ளை அடித்து சென்றுவிட்ட தகவலும் பரவியது.
இதையடுத்து கொள்ளையடித்தவர்கள் அந்த தேசிய விருது மெடலை மட்டும் ஒரு பேப்பரில் வைத்து அய்யா எங்களை மன்னித்து விடுங்கள்.. உங்கள் உழைப்பு உங்களுக்கு என எழுதி பையில் தொங்கவிட்டு சென்றுள்ளனர். அதை கைபற்றிய போலீசார் தீவிர விசாரணையில் உள்ளனர். விரைவில் திருடியவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எல்லாம் பொய்! பிக்பாஸில் கமல் நடந்து கொண்ட விதத்தை வெளிச்சம் போட்டு காட்டிய பிரபலம்