Cinema History
முதன்முதலா பார்த்ததும் படப்பிடிப்பில் உளறிய காமெடி நடிகர் – ‘இடியட்’னு திட்டிய மணிரத்னம்!..
முண்டாசுப்பட்டியில் நடித்த காமெடி நடிகர் முனீஸ்காந்த்தை மறக்கவே முடியாது. மனுஷன் அம்புட்டு காமெடி செய்து நம்மை பிரமிப்பில் ஆழ்த்தியிருப்பார். அவரது பட அனுபவங்கள் குறித்து என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமா…
என்னைப் பொறுத்தவரை சினிமாவை ஒரு கடவுள் மாதிரி பார்ப்பேன். எனக்கு முண்டாசுப்பட்டில என்னைப் பார்க்கும்போது ஒரு பதட்டமாத் தான் இருந்தது.
கோவைல ராகம் தாளம் பல்லவின்னு ஒரு தியேட்டர்ல இந்தப் படத்தைப் பார்க்கப் போனேன். கிளைமாக்ஸ் சீன்… ஓடுச்சு. அவ்வளவு பெரிய திரைல எனக்கு ஒரே கைதட்டல். 800 சீட்டாவது இருக்கும். அவ்வளவு பெரிய ஆர்ப்பரிப்பு. ஒரு நிமிஷம் கண்கலங்கிட்டேன். இன்னும் பிரமிப்பாத் தான் இருக்கு.
கடல் படத்துல நடிச்சது ரொம்ப பிரமிப்பா இருந்துச்சு. மணிரத்னம் சார் படம். தனா சார் தான் படைத்தலைவன் எடுத்தாரு. அவரு தான் ஆடிஷன்ல கூப்பிட்டு செலக்ட் பண்ணாங்க.
ஒருநாள் திருச்செந்தூர் பக்கம் மணப்பாடுல சூட்டிங். காலைலயே சன் ரைஸ். டிரஸ் எல்லாம் போட்டுக்கிட்டு ஒரு பாலத்துல நின்னு அப்படியே கீழ பார்க்கணும். தண்ணிக்குள்ள பார்த்துட்டே டேய் உள்ள ஏதும் கல்லுக்குள்ள இடுக்குல கிடுக்குல இருக்கானான்னு பாருடா அப்படின்னு தான் டயலாக். அப்ப ராம்தாஸ் என்பேரு. ராம்னு வச்சிருந்தாரு
மணி சாரே என்கிட்ட வந்து சொல்லவும் நான் பீஸ் ஆயிட்டேன். சரின்னுட்டு லைட் வேற எறங்கிக்கிட்டே இருக்கு. போன உடனே அப்படி பார்த்துட்டு கல்லுகில்லு இருக்கான்னு சொன்னேன்ல ‘கட் கட்… ஏய்… ராம் என்னடா…? எனக்கு ஃபுல் சார்ஜ் இறங்கிக்கிட்டே இருக்கு. அங்கே லைட் இறங்கிக்கிட்டே இருக்கு. யு ஃபூல் இடியட்’ அப்படின்னு திட்டினாரு. எனக்கு சுத்தமா போயிடுச்சு.
அப்புறம் கேமரா மேன் வந்து சொன்னாரு. யோவ்… அவரு கோவமே படமாட்டாருய்யா… அவரையே நீ கோபப்பட வச்சிட்டீயே’னு கேட்டாரு.. ‘இல்ல சார் எனக்கு வரல’ன்னு சொன்னேன்.
அவரைப் பார்த்த உடனேயே… அதெல்லாம் சொல்லலாமாய்யான்னாரு… கடல் படம் எனக்கு பெரிய அனுபவமா இருந்தது. எனக்கு என்னன்னா அந்த பிரமிப்பிலேயே இருந்துட்டேன். அதுல இருந்து சாதாரணமா என்னால வெளிய வர முடியல’ என முனிஷ்காந்த் பேசினார்.