மணிரத்னம் செய்த செயல்!.. நெகிழ்ந்து போய் கண்கலங்கிய பாண்டியராஜன்..

by சிவா |   ( Updated:2023-06-16 17:37:50  )
manirathnam
X

திரைக்கதை மன்னன் பாக்கியராஜிடம் பாடம் பயின்றவர் பாண்டியராஜன். அவரின் பல படங்களில் வேலை செய்துவிட்டு இயக்குனராக மாறினார். பாண்டியராஜன் முதலில் இயக்கிய திரைப்படம் கன்னிராசி. அதன் பின் ஆண் பாவம், மனைவி ரெடி உள்ளிட்ட சில படங்களை இயக்கினார். குருநாதர் பாக்கியராஜை போலவே ஜாலியான குடும்ப படங்களை இயக்கி ரசிகர்களை சிரிக்க வைத்தவர் இவர்.

pandi

pandiarajan

இவர் 1996ம் வருடம் இயக்கிய திரைப்படம் கோபாலா கோபாலா. இந்த படத்தில் பாண்டியராஜன் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக குஷ்பு நடித்திருந்தார். இப்படத்தின் 100வது விழாவுக்கு திரையுலகின் முக்கிய ஆளுமைகளுக்கு பாண்டியராஜன் அழைப்பிவிடுத்தார். அதில், மணிரத்னமும் ஒருவர்.

ஆனால், விழா நடைபெறும் அன்றைக்கு மணிரத்னம் டெல்லியில் இருந்தார். ஆனாலும், டெல்லியில் வேலையை முடித்துவிட்டு அவசரமாக விமானத்தை பிடித்து சென்னை வந்து நேராக விழா நடக்கும் இடத்திற்கு சென்றார். மேடையில் அமர்ந்த அவரை சில வார்த்தைகள் பேச சொல்ல அவரோ தயங்கினார். அருகில் இருந்த வைரமுத்து ‘பாண்டியரஜனை வாழ்த்தி எதாவது பேசுங்க’ என சொல்ல மைக்கை பிடித்த மணிரத்னம் ‘நான் பகல் நிலவு படம் இயக்கினேன். அது பேசப்பட்டாலும் சரியான அங்கிகாரம் கிடைக்கவில்லை. அடுத்து இதயக்கோவில் இயக்கினேன். அதும் அப்படித்தான். அடுத்து ‘மௌனராகம்’ படத்தை இயக்கி அது தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்தது.

அப்போது என்னை ஒரு தயாரிப்பாளர் சந்தித்து பேசினார். ‘நீங்க பாண்டியராஜனின் கால்ஷீட்டை வாங்குங்க.. நாம படம் பண்ணலாம்’ என்றார். பாண்டியராஜன் அந்த நேரத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தார். அதனால்தான் பாண்டியராஜன் என்னை அழைத்ததும் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன்’ என சொல்ல பாண்டியராஜன் கண்கலங்கி விட்டாராம்.

Next Story