கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படியா? காதலிக்கு மணிரத்னம் கொடுத்த பிரமாண்ட சர்ப்ரைஸ்…

தமிழ் சினிமாவில் வித்தியாசமான காட்சி அமைப்புகளை கொண்டு திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவராக இயக்குனர் மணிரத்தினம் இருக்கிறார்.

மணிரத்னம் சினிமாவிற்கு அறிமுகம் ஆன காலம் முதலே திரைப்படத்தில் அவருடைய காட்சி அமைப்புகள் மற்றும் வசனங்கள் தனித்துவமானதாக இருந்தன. அவையே அவரின் திரைப்படங்களை தனியாக எடுத்துக் காட்டின.

maniratnam2

maniratnam2

உதாரணமாக தளபதி, நாயகன், அஞ்சலி போன்ற திரைப்படங்களில் பல காட்சி அமைப்புகள் மாறுபட்டதாக இருக்கும். அப்போதைய தமிழ் சினிமாவில் மற்ற திரைப்படங்களை காட்டிலும் இந்த திரைப்படங்கள் வித்தியாசமான அனுபவத்தை கொடுத்திருக்கும்.

மணிரத்னம் கொடுத்த பரிசு:

மணிரத்னம் அவரது திரைப்படங்களில் வரும் காதல் காட்சிகளுக்கு மிகவும் பிரபலமானவர். காதலை மையமாக வைத்து அவர் இயக்கிய அலைபாயுதே, ஓ காதல் கண்மணி போன்ற திரைப்படங்கள் இப்போதும் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் திரைப்படங்கள் ஆகும்.

அப்படிப்பட்ட மணிரத்னம் நிஜ வாழ்க்கையில் தனது மனைவியை எவ்வளவு காதல் செய்தார் என்று சுஹாசினி ஒரு பேட்டியில் கூறியுள்ளார். மணிரத்தினம் தனது மனைவி சுஹாசினியை அதிகமாக காதலித்தார். திருமணம் ஆவதற்கு முன்பே அவருக்கு பல இன்ப அதிர்ச்சிகளை கொடுத்துள்ளார் மணிரத்னம்.

இதுக்குறித்து சுஹாசினி கூறும்போது ஒரு முறை ”உனக்கு டிரஸ் வாங்கி வைத்திருக்கிறேன். நேரில் வா என சுஹாசினியை அழைத்துள்ளார் மணிரத்தினம். நேரில் சென்று சுஹாசினிக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்துள்ளது. ஏனெனில் எக்கச்சக்க ஆடைகள் மற்றும் நகைகள் போன்ற பலவற்றை வாங்கி வைத்திருந்தார் மணிரத்தினம். அனைத்தையும் சுஹாசினிக்காக பார்த்து பார்த்து எடுத்திருந்தார் மணிரத்னம். எனவே திருமணத்திற்கு முன்பே அப்படி ஒரு காதலை வெளிப்படுத்தியவர் மணிரத்னம் என அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சிவாஜிக்கு அப்பறம் விஜய் தான் – அந்த விஷயத்தை குறித்து பெருமையா பேசிய பிரபலம்!

 

Related Articles

Next Story