நான் யார்னு அப்பாகிட்ட காட்டனும்.. அதுக்கு இப்படியா? விக்ரம் மகனின் வெறிய பாருங்க

by Rohini |
dhuruv
X

dhuruv

தமிழ் சினிமாவில் ஒரு டாப் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விக்ரம். தற்போது தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்து அந்தப் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் விக்ரம். இன்று கோவை, திருச்சி , மதுரை, திருநெல்வேலி போன்ற ஊர்களுக்கு தங்கலான் திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக கலந்து கொள்ள சென்றிருக்கிறார்.

நடிகர் என்பதையும் தாண்டி ஒரு மாடலாகவும் மக்கள் முன் தன்னை காண்பித்து வருகிறார் விக்ரம். பொன்னியின் செல்வன் ப்ரோமோஷனிலேயே படு ஸ்டைலான லுக்கில் விதவிதமான ஹேர் ஸ்டைலுடன் வந்து ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட்டே வைத்தார் விக்ரம்.

அதே போல் இப்போது தங்கலான் திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்கும் தன்னை எந்தளவுக்கு ஸ்டைலாக காட்டவேண்டுமோ அப்படி வந்து கொண்டிருக்கிறார். இந்த ஸ்டைல், புகழ் என எல்லாவற்றிற்கும் பின்னாடி விக்ரமின் கடும் உழைப்பு இருக்கிறது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

தங்கலான் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவிலேயே விக்ரம் தான் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டேன்? என்பதை பற்றி முதன் முறையாக அவ்வளவு பெரிய மேடையில் கூறியிருந்தது அனைவருக்கும் ஒரு கண்ணீரை வரவழைத்தது. சினிமாவிற்கு நடிக்க வரவேண்டும் என்ற ஆசையில் கோடம்பாக்கத்திற்கு வந்தவர் கிட்டத்தட்ட 10 வருடங்கள் மிகவும் போராடியிருக்கிறார்.

இந்த நிலையில் விக்ரமை தொடர்ந்து அவரது மகனும் இப்போது சினிமாவில் நடிக்க வந்திருக்கிறார். ஒரு சில படங்களில் துருவ் விக்ரம் நடித்திருந்தாலும் அவரால் ஒரு வெற்றியை கொடுக்கமுடியவில்லை. தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்துவருகிறார் துருவ் விக்ரம்.

இதில் துருவ் விக்ரமை பற்றி மாரி செல்வராஜ் கூறியது மிகவும் ஆச்சரியத்தை வரவழைத்திருக்கிறது. அதாவது மாரி செல்வராஜை நம்பி இரண்டு வருடங்கள் துருவ் விக்ரம் வேறெந்த படங்களிலும் நடிக்கவில்லையாம். அப்பாவை விடவும் கஷ்டப்பட்டு உழைப்பை போட்டுக் கொண்டிருக்கிறார் என மாரி செல்வராஜ் கூறியிருக்கிறார்.

இதை பற்றி கேட்டால் துருவ் விக்ரம் ‘அப்பா இதுக்கு மேல பண்ணியிருக்கிறார். இன்னும் பண்ணலாம் சார்னு’ சொல்வாராம். விக்ரமின் உழைப்பின் தாக்கம் துருவ் விக்ரம் கிட்டயும் நிறையவே இறங்கி இருப்பதாகவும் அப்பா கிட்ட நிரூபிக்கனும்னா வெற்றியோட நிரூபிக்கனும் என நினைக்கிறாராம் துருவ் விக்ரம். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய உழைப்பு அப்பாவுக்கு பிடிக்க வேண்டும் என நினைக்கிறாராம் துருவ் விக்ரம்.

Next Story