பரியேறும்பெருமாள் ரிலீசுக்குப் பிறகு மாரி செல்வராஜ் செய்த தரமான சம்பவம்... அப்படி ஒரு கஷ்டகாலமாம்!

by sankaran v |   ( Updated:2024-08-23 07:21:28  )
ms
X

ms

மாரி செல்வராஜ் இயக்கத்தில் இன்று வாழை படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது. அவரது இயக்கத்தில் வந்த எல்லா படங்களுமே பேசும்படியாகத் தான் உள்ளன. அதனால் அவர் தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராகி விட்டார்.

மாரி செல்வராஜ் யூடியூப் சேனல் ஒன்றில் தனது சொந்த ஊரில் உள்ள வீட்டை ஒவ்வொரு அறையாக விவரிக்கிறார். அப்போது தான் படுத்த இடத்தையும், ஓட்டு வீட்டின் சுவாரசியத்தையும் பகிர்ந்து கொள்கிறார்.

அப்பா சாமியாடும்போது அன்னைக்கு மட்டும் புதுசா பேசுற மாதிரி இருக்கும். அது ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கும். நார்மலா பார்க்கும்போது அப்பா வேற மாதிரி இருப்பாரு. சாமி ஆடும்போது வேற மாதிரி இருப்பாரு. அப்படி ஒரு இன்ட்ரஸ்ட் வரும்.

வார்த்தைகளில் வேகம், வீரம் இருக்கும். திடீர்னு புதுசு புதுசா வார்த்தைகள் சொல்வாரு. அவரு அதை எங்கிருந்து எடுத்துட்டு வர்றாரு? பேசுறாருன்னு குழப்பமா இருக்கும். நான் 10ம் வகுப்பு படிக்கும்போது கரண்ட் வந்தது. 12 படிக்கும்போது டிவி வந்தது.

ஃபேன் வாங்கறதுக்கு 6 மாசம் காசு கொடுத்துருப்போம். மூத்த அண்ணன் சிவனனைந்த பெருமாளுக்கு வாத்தியார் வேலை கிடைச்சது. அதுக்கு அப்புறம் தான் வீட்டைக் கொஞ்சம் கொஞ்சமா டெவலப் பண்ணிக் கட்டினான்.

vaahai

vaahai

இந்த வீட்டைக் கட்டினதுமே எல்லாரும் வேலை கிடைச்சி வெளியே போயிட்டோம். அப்புறமா யாருமே இந்த வீட்டுல பெரிசா இருக்கல. அம்மா, அப்பா மட்டும் தான் இருப்பாங்க.

இந்த வீட்டை அண்ணன் பார்த்துப் பார்த்துக் கட்டினான். அதனால அதை நான் சம்பாதிச்சிட்டேன்னு உடனே இடிச்சிக் கட்டிட முடியாது. பார்த்து பார்த்துக் கட்டுனதனால அதுல எமோஷனல் இருக்கும் என்று வாழ்வின் யதார்த்தத்தை அப்படியே சொல்கிறார் மாரி செல்வராஜ்.

பரியேறும் பெருமாள் படத்துக்கு அப்புறம் தான் பாத்ரூமே கட்டினாராம் மாரி செல்வராஜ். எவ்வளவு கஷ்டத்தை அப்பவே அனுபவிச்சிருக்காருன்னு நமக்கு பார்க்கும்போது மலைப்பாகத் தான் இருக்கிறது.

Next Story