இயக்குனராவதற்கு முன் மாரி செல்வராஜ் என்னென்ன வேலையெல்லாம் செஞ்சிருக்கார் பாருங்க!..
இயக்குனர் மாரி செல்வராஜ் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் வலிகளைச் சொல்லும் வகையில் பல படங்களை இயக்கியுள்ளார். அந்த வகையில் இவர் இயக்கிய பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களை இயக்கி பல்வேறு தரப்பினரின் கவனத்தையும் பெற்றார். தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராகத் திகழ்கிறார். இவரது சொந்த ஊர் நெல்லை மாவட்டம், புளியங்குளம். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
கோடையால் விவசாயத் தொழில் நலிவுறும்போது இவர் வாழ்வாதாரம் காக்க வெளியூருக்குச் சென்று வேடம் போட்டு ஆடுவாராம். அந்த வகையில் புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்பதற்கேற்ப மாரிசெல்வராஜூம் சிறுவயதிலேயே தன்னால் என்னென்ன வேலைகள் செய்ய முடியுமோ அத்தனை வேலைகளையும் செய்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் என்ற சிறுகதைத் தொகுப்பையும் எழுதியுள்ளார். இவர் ஒரு கட்டத்தில் சினிமா மீதுள்ள மோகத்தால் சென்னைக்குச் சென்று அங்கு இயக்குனர் ராமிடம் 10 வருடங்களாக உதவி இயக்குனராகப் பணிபுரிந்துள்ளார். அதன்பிறகு தான் இவர் தனக்கே உரிய ஸ்டைலில் படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார்.
இவர் இயக்கிய முதல் படமான பரியேறும் பெருமாள் ஒட்டு மொத்த தமிழ்சினிமா ரசிர்களை மட்டுமல்லாது திரையுலகையும் ஈர்த்தது. 2018ல் வெளியானது. சிப்பிப்பாறை, கதிர், ஆனந்தி, யோகி பாபு உள்பட பலர் நடித்து இருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். முதல் படமே திருநெல்வேலியைக் கதைகளமாகக் கொண்டது.
தொடர்ந்து தனுஷின் மாறுபட்ட கெட்டப்பில் கர்ணன் மற்றும் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின் தரமான நடிப்பில் மாமன்னன் ஆகிய படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். அந்த வகையில் இன்று இவர் இயக்கிய வாழை என்ற உயிரோட்டமான படம் திரைக்கு வந்துள்ளது. இதன் டிரெய்லரே பலரது கவனத்தையும் ஈர்த்தது. இந்த நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் ஒரு ஆச்சரியமான தகவலை தெரிவித்துள்ளார். இவர் என்ன சொல்றாருன்னு பாருங்க.
சரவணா ஸ்டோர்ல வேலை பார்த்தேன். ஒரு வீட்ல வீட்டு வேலை பார்த்தேன். பெட்ரோல் பங்க்ல வேலை பார்த்தேன். கொத்தனார் வேலை பார்த்தேன். அதுக்கு அப்புறம் தான் ராம் சார் கிட்ட அசிஸ்டண்டா சேர்ந்தேன் என்கிறார் அவர்.