16 வயதினிலே டயலாக்கை நினைவுபடுத்திய மாரிசெல்வராஜ்... செம ஃபன்னியா இருக்கே!
மாரி செல்வராஜ் வேகமாக வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர். இவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இவரது இயக்கத்தில் வந்த பல படங்களைப் பாராட்டியுள்ளார். பரியேறும் பெருமாள், கர்ணன், மாமனிதன், வாழை ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கும் படம் வாழை. அடுத்ததாக இவர் இயக்கும் படம் பைசன்.
சொல்ல வந்த கருத்தைத் துணிச்சலாக சொல்வதில் வல்லவர் இவர். ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை தான் இயக்கும் படங்களில் அழகாகக் கடத்துவதில் இவர் கைதேர்ந்தவர். இவர் ஆரம்பத்தில் அவ்வளவு கஷ்டப்பட்டுள்ளார். இயக்குனர் ராமிடம் உதவியாளராக இருந்துள்ளார். கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி ஆகிய படங்களில் உதவி இயக்குனராக வேலை பார்த்துள்ளார்.
Also Read: நம்மவருக்குப் பிறகு மீண்டும் கமல், கரண் கூட்டணி… அடுத்த அதிரடி ஆரம்பம்..!
பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய பிறகு தான் தனது சொந்த ஊரில் உள்ள வீட்டிற்கு டாய்லெட்டேக் கட்டினாராம். அந்த வகையில் இவர் தற்போது ஒரு கருத்தை காமெடியாகச் சொல்லி இருக்கிறார். என்னன்னு பார்க்கலாமா...
16 வயதினிலே படத்தில் கமல் பேசும் டயலாக் அப்போது டிரெண்டிங்காக இருந்தது. 'ஆத்தா ஆடு வளர்த்துச்சு. கோழி வளர்த்துச்சு. ஆனா நாய மட்டும் வளர்க்கல. என்னைத் தான வளர்த்தாங்க. நான் தான மயிலு உனக்கு எல்லாம்'னு அப்பாவியாக கமல் வெத்தலையை வாய் நிறைய போட்டுக் குதப்பிக் கொண்டு ஸ்ரீதேவியிடம் பேசுவார்.
அப்போது கமலிடம் ஒரு அப்பாவித்தனம் தெரியும். வெள்ளந்தியான உள்ளம் தெரியும். அந்த அளவுக்கு அந்தக் காட்சியில் மட்டுமல்ல. படம் முழுவதும் சப்பாணியாகவே வாழ்ந்து இருப்பார். கமல் நடிப்பில் எஸ்.ஏ.ராஜ்கண்ணு தயாரிப்பில் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் தமிழ் சினிமா உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. அது போன்ற சாயலில் இயக்குனர் மாரி செல்வராஜ் சொன்ன டயலாக் தான் இது.
எங்க வீட்ல அம்மா பண்ணி வளர்த்தாங்க. ஆடு, மாட ஆசையா வளக்கற மாதிரி பண்ணிய யாரும் வளக்க மாட்டாங்க. பண்ணி குட்டிய எல்லாரும் இழிவா பாத்தாங்க. அதனாலேயே எனக்கு பண்ணி குட்டின்னா ரொம்ப புடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.