Good Bad Ugly: லாஜிக்கே இல்லாம.. யோசிக்காம! குட் பேட் அக்லி படம் பார்த்து இயக்குனர் போட்ட போஸ்ட்

ajith_ aadhik
Good Bad Ugly: இன்று உலகெங்கிலும் ரிலீஸாகியிருக்கிறது அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம். 1000 ஸ்க்ரீன்களில் இந்தப் படம் ரிலீஸாகியிருப்பதாக கூறப்படுகிறது. அஜித் சினிமா கெரியரிலேயே இந்தப் படத்திற்குத்தான் அதிக டிக்கெட்டுகள் விற்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் தீவிர ரசிகர் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் ஒரு ஃபேன் பாயாக இந்தப் படத்தை ஆதிக் எப்படி எடுத்திருக்கிறார் என்பதை பார்க்கவே ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள்.
கமலுக்கு எப்படி ஒரு ஃபேன் பாயாக லோகேஷ் விக்ரம் படத்தை கொடுத்து ப்ளாக் பஸ்டர் ஹிட்டாக்கினாரோ அதை போலவே குட் பேட் அக்லி படமும் இருக்கும் என்றுதான் அனைவரும் நம்பியிருக்கின்றனர். இதுவரை பாசிட்டிவான விமர்சனமே படத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. அதுவும் தொடர்ந்து விடுமுறை என்பதால் வசூலிலும் இந்தப் படம் பெரிய அளவில் சாதனை படைக்கும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
விடாமுயற்சி படத்தை நம்பி ரசிகர்கள் பெரியளவில் ஏமாந்து போயிருந்தனர். அஜித் ரசிகர்களை பொறுத்தவரைக்கும் கதையை விட அஜித்தை மாஸாக ஆக்ஷன் ஹீரோவாக படத்தில் காட்டினாலே போதும். படத்தை வெற்றியடைய செய்து விடுவார்கள். இதுதான் அஜித் ரசிகர்கள். அஜித் ரசிகர்களின் பல்சை பிடித்து பார்த்திருக்கிறார் ஆதிக். அஜித் ரசிகர்களுக்கான படமாகத்தான் குட் பேட் அக்லி படமும் இருக்கிறது.

இந்த நிலையில் பிரபல இயக்குனர் மோகன் ஜி குட் பேட் அக்லி படம் குறித்து அவருடைய கருத்துக்களை கூறியிருக்கிறார். அதாவது படம் பார்த்துவிட்டு இப்போதுதான் வெளியே வந்தேன், ஆதிக் இப்படி ஒரு படம் பண்ணுவாருனு எதிர்பார்க்கவில்லை. பயங்கரமான எண்டெர்டெய்னர். திருப்தியா படம் பார்த்த ஒரு ஃபீல் இருக்கு. தல இப்படி எல்லாம் பண்ணுவார்னு எதிர்பார்க்கல.
மங்காத்தா படத்திற்கு அப்புறம் ஃபேன்ஸ் பயங்கரமா என்ஜாய் பண்ணிட்டு வெளியே வர்றதை இப்பதான் பார்க்கிறேன். லாஜிக் எல்லாம் இல்லாம படத்தை பாருங்க. அஜித் சாரோட மொத்த இமேஜையும் யூஸ் பண்ணி படம் பண்ணிருக்காங்க. குட் பேட் அக்லி ஒரு பெரிய ரோலர் கோஸ்டர் ரைடு. எதையுமே யோசிக்காமல் படம் பார்த்துட்டு என்ஜாய் பண்ணிட்டு வாங்க என்று மோகன் ஜி கூறியிருக்கிறார்.