Categories: Cinema News latest news

நானும் எவ்ளோ நாள்தான் காத்திருக்கிறது? ‘தனி ஒருவன் 2’ வால் அண்ணனுக்கு நேர்ந்த கதி

Jayam Mohan Raja: ஒரு பக்கம் அண்ணன் இயக்கத்தில் பிஸியாக இருக்கிறார். இன்னொரு பக்கம் தம்பி நடிப்பில் படு பிஸியாக இருக்கிறார். இருந்தாலும் ஜெயம் ரவியை இந்த சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய பெருமை அவர் அண்ணனான மோகன் ராஜாவையே சேரும்.

முதல் படத்திலேயே வெயிட்டான கதாபாத்திரத்தை கொடுத்து இந்த கோலிவுட்டின் கிங் என நிருபித்தார் மோகன் ராஜா. தனி ஒருவன் என்ற அற்புதமான படைப்பை கொடுத்து மீண்டும் ஜெயம் ரவியை இந்த சினிமாவில் தலை நிமிர வைத்தவர் மோகன் ராஜா.

இதையும் படிங்க: வெற்றிமாறனுடன் இணையும் அஜித்?.. இவ்ளோ ஷாக் கொடுத்த தாங்கமாட்டாங்க ஃபேன்ஸ்!…

அந்த படத்தின் இரண்டாவது பாகம் தொடர்பாக ஒரு அறிவிப்பு வந்த நிலையில் இன்னும் அந்தப் படத்திற்கான எந்த வேலைகளும் ஆரம்பிக்கப்படாமலேயே இருக்கின்றன. ரசிகர்களும் அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் அண்ணன் படத்தை தவிர்த்து மற்ற எல்லா படங்களுக்கும் ஜெயம் ரவி கால்ஷீட் கொடுத்து நடித்து வருகிறார். இதனால் பொறுமை இழந்தாரோ தெரியவில்லை மோகன் ராஜா. நடிப்பின் மீது கவனம் செலுத்த சென்று விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: இத்தனை குறள் படித்தவருக்கு இந்த குரல் கேக்கலயா? மான நஷ்ட வழக்கு போடப் போகும் அமீர்

சாந்தனு நடிக்கும் ஒரு புதிய படத்தில் சாந்தனுவுக்கு அண்ணனாக நடிக்கிறாராம் மோகன் ராஜா. ஏற்கனவே ஒரு சில படங்களில் நடித்திருக்கும் மோகன் ராஜா இப்போது நடிப்பின் பக்கம் சென்றிருப்பது தனி ஒருவன் 2 இப்போதைக்கு வராது போல என வருத்தத்தில் இருப்பதாக தெரிகிறது.

Published by
Rohini