இவங்களலாம் வச்சி படம் எடுக்க முடியுமா?.. அந்த படத்துல நடிச்சவங்களாம் யாருனு தெரியுமா?.. வேதனையை பகிர்ந்த மௌலி!..

mouli
தமிழ் சினிமாவில் மிகவும் மதிக்கத்தக்க நடிகர்களில் நடிகர் மௌலியும் ஒருவர். தமிழ், தெலுங்கு, ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இயல்பாகவே இவர் ஒரு இயக்குனரும் ஆவார். இவரின் திறமைக்காக பல விருதுகளை பெற்றவர் மௌலி.
நடிகர் கமலுக்கு மிகவும் நெருக்கமானவரும் கூட. இவர் பல படங்களில் கதையாசிரியராகவும் இருந்திருக்கிறார். இவர் இயக்கிய படங்களில் பம்மல் கே சம்பந்தம், நளதமயந்தி போன்ற படங்கள் வெற்றித்திரைப்படங்களாக அமைந்தன.
70களிலேயே சினிமாவிற்கு வருவதற்கு முன்னரே 20க்கும் மேற்பட்ட கதைகளை எழுதி வைத்திருந்தாராம். முதலில் ஒரு அமெரிக்கன் கம்பெனியில் வேலையில் இருந்திருக்கிறார் மௌலி. இவருக்கு தெரிந்தவர்கள் சிலர் இவரிடம் உள்ள கதைகளை அறிந்து கதையாசிரியராக சினிமாவிற்கு வரலாமே என்று ஆலோசனை கூறியிருக்கின்றனர்.

அதனால் இருந்த வேலையை ராஜினாமா செய்து விட்டு ‘இவர்கள் வித்தியாசமானவர்கள்’ என்ற படத்திற்கு கதை எழுதியிருக்கிறார். இந்தப் படத்தில் நாகேஷ், ஸ்ரீவித்யா , படஃபட் லட்சுமி போன்ற முக்கிய நடிகர்கள் நடித்திருந்த படம். அந்த நேரத்தில் இவர்கள் எல்லாம் பிஸியாக இருந்ததனால் இவரின் படத்தில் நடிக்கும் போதே வேறொரு படத்திற்கும் கால்ஷீட் கொடுத்து நடித்து வந்திருக்கின்றனர்.
அதனால் மௌலியை நீண்ட நாள்களாக காக்க வைத்திருக்கின்றனர். ஏன் தேவையில்லாமல் வேலையை விட்டோம் என்று வருந்தும் அளவுக்கு அவரை வருத்தப்பட வைத்திருக்கின்றனர். எப்படியோ ஒரு வழியாக படத்தை முடித்து விட்டு படமும் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றது.

அதன் பிறகு மௌலி ‘ரோட்டுல போறவன வச்சி கூட படம் எடுப்பேன். ஆனால் ஆர்ட்டிஸ்ட்ட வச்சி படமே எடுக்க மாட்டேன்’ என்று முடிவு செய்து அதன் பிறகு இயக்கிய படம் தான் ‘மற்றவை நேரில்’ என்ற திரைப்படம். இந்த சுவாரஸ்ய தகவலை மௌலியே ஒரு பேட்டியில் கூறினார்.
இதையும் படிங்க : இனிமே இந்த மாதிரி ஆனுச்சுன்னா அவ்வளவுதான்! – ட்ரைவரால் கடுப்பான எம்.ஜி.ஆர்!..