கிராமிய மணம் கமழும் படங்களை அதிரடியாக தந்த இயக்குனர் இவர் தான்…!

Published on: July 25, 2022
---Advertisement---

இயக்குனர் முத்தையா கிராமியப்படங்களில் மசாலா கலந்து அதிரடியாக்கி சூப்பர்ஹிட் வெற்றிப்படங்களைக் கொடுத்து வருகிறார். முன்னதாக இயக்குனர் ஹரி இந்த பார்முலாவைத் தான் பயன்படுத்தி வந்தார்.

அதே போல் இயக்குனர் முத்தையா மாறுபட்ட கதைகளத்துடன் கிராமத்து ரசிகர்களும் கைதட்டி விசிலடித்து ஆரவாரத்துடன் பார்க்கும் வகையில் அசத்தலான படங்களை இயக்கி வருகிறார்.

Director Muthiah

கத்திக்கும், அரிவாளுக்கும், ரத்தத்திற்கும் பஞ்சமிருக்காது. பார்ப்பதற்கு சாதுவாக தெரியும் இவர் இயக்கினால் இப்படி இருக்குமா என்று நினைத்துக் கூட பார்க்க முடியாது. அந்த அளவு விறுவிறுப்பானவை இவரது படங்கள். இவற்றிலிருந்து ஒரு சிலவற்றைப் பார்க்கலாம்.

குட்டிப்புலி

2013ல் இயக்குனர் முத்தையா இயக்கிய அதிரடி படம் இது. சசிக்குமார், லட்சுமி மேனன் மற்றும் சரண்யா உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரானின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட்.

அருவாக்காரன், காத்து காத்து, ஆத்தா உன் சேலை, தாட்டியாரே தாட்டியாரே ஆகிய பாடல்கள் உள்ளன. இந்தப்படம் சசிக்குமார் நடித்த கிராமியப்பட வரிசையில் ஒரு மைல் கல். வெகுஜன ரசிகர்கள் பார்த்துக் கொண்டாடிய படம்.

கொம்பன்

komban

2015ல் வெளியான இந்தப்படத்தில் கார்த்தி நடித்துள்ளார். இவரது திரையுலக வரலாற்றில் பருத்தி வீரனுக்குப் பிறகு அதே அளவு வரவேற்புடன் வெளியான மாபெரும் வெற்றிப்படம் இதுதான். முத்தையாவின் இயக்கத்தில் படம் பட்டையைக் கிளப்பியது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார்.

படத்தில் இவருக்கு ஜோடி லட்சுமி மேனன். ராஜ்கிரண், சூப்பர் சூப்பராயன், கோவை சரளா, கருணாஸ், தம்பி ராமையா, ஞானசம்பந்தன் உள்பட பலர் நடித்துள்ளனர். கம்பிக்கரை வேட்டி, அப்பப்பா, கருப்பு நிறத்தழகி, மெல்ல வளஞ்சது ஆகிய பாடல்கள் உள்ளன.

மருது

marudhu vishal

2016ல் வெளியான சூப்பர்ஹிட் திரைப்படம் மருது. இயக்குனர் முத்தையாவின் அதிரடி படங்களில் இதுவும் ஒன்று. விஷால், ஸ்ரீதிவ்யா, சூரி உள்பட பலர் நடித்துள்ளனர்.

ராதாரவி, ஞானசம்பந்தன், ஆர்.கே.சுரேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி.இமானின் இசை படத்திற்குப் பிளஸ் பாயிண்ட். சூறாவளிடா, ஒத்தசடை ரோசா, கருவக்காட்டு கருவாயா, அக்காபெத்த ஜக்காவண்டி, மருது மருது ஆகிய பாடல்கள் உள்ளன.

தேவராட்டம்

devarattam

கவுதம் கார்த்திக் நடித்த தேவராட்டம் என்ற அதிரடியான கிராமத்துப் படத்தை இயக்கியவரும் எம்.முத்தையா தான். படம் பார்ப்பவர்களை பரவசம் கொள்ளச் செய்யும். இந்தப்படத்தில் கதாநாயகி மஞ்சிமா மோகன். விஜயகுமார், சூரி, பெப்சி விஜயன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைத்துள்ளார். இந்தப்படத்தில் கௌதம் கார்த்திக்கிற்காக நடிகர் விஜய் சேதுபதி மதுர பளபளக்குது ஒரு பாடல் பாடியுள்ளார். பசம்புக்கலி, எங்கா ஆட்டம், அழகரு வாராரு, லேசா லேசா, ஆத்தா தொட்டில், உலகம ;உன்ன விட்டு ஆகிய பாடல்கள் உள்ளன.

புலிக்குத்தி பாண்டி

2021ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் எம்.முத்தையா. விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், சமுத்திரக்கனி, சிங்கம்புலி, ஆடுகளம் நரேன் உள்பட பலர் நடித்துள்ளனர். என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்துள்ளார்.

இந்தப்படம் திரையரங்கிற்கு வராமல் சன் டிவியில் பொங்கல் அன்று நேரடியாக ரிலீஸானது குறிப்பிடத்தக்கது. ஆலங்காலன் குருவி, சொல்லாமத்தான், யம்மாடியம்மா ஆகிய பாடல்கள் உள்ளன.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.