இந்தியாவுல அவன் ஒருத்தன்தான்!.. சூரியை விட்டு விஜய் சேதுபதி பக்கம் போன மிஷ்கின்...
Vijay sethupathi: சித்திரம் பேசுதடி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின். ஒரு வித்தியாசமான கதை சொல்லி. கேமரா கோணங்களிலேயே காட்சிகளை நகர்த்தி கதை சொல்வார். இவரின் இரண்டாவது படமான 'அஞ்சாதே' இப்போதும் பலருக்கும் ஃபேவரைட் திரைப்படமாக இருக்கிறது.
எல்லோரும் பேயை டெரராக ஹாட்டினால் மிஷ்கின் மட்டுமே பேயை கூட ஒரு தேவதை போல காட்டினார். அப்படி வெளிவந்த பிசாசு திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது. இன்னும் சொல்லப்போனால் ரஜினியின் லிங்கா படத்திற்கு கூட்டம் குறைந்து பிசாசு படத்திற்கு போனார்கள்.
இதையும் படிங்க: ஒன்னு இல்ல இரண்டு… அஜித்தின் அடுத்த ப்ளான் இதான்… ஆனா இவ்வளோ ஸ்பீடா?
முகமுடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இதில், துப்பறிவாளன் படத்தை தயாரித்து நடித்தவர் விஷால். அப்போதுதான் அவருக்கு மிஷ்கினுடன் பழக்கம் ஏற்பட்டது. அதன்பின் துப்பாறிவாளன் 2 படம் உருவானது. ஆனால், விஷாலுக்கும், மிஷ்கினுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு அப்படம் நின்றுபோனது.
ஒருகட்டத்தில் மிஷ்கின் நடிகராக மாறினார். நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சூப்பர் டீலக்ஸ், மாவீரன், லியோ என பல படங்களிலும் நடித்தார். ஒருபக்கம், சினிமா விழாக்களில் மிஷ்கின் பேசுவதும் சர்ச்சையாக மாறி வருகிறது. கொட்டுக்காளி பட விழாவில் மிஷ்கின் பேசியது அறுவறுப்பாக இருந்ததாக பலரும் கூறினார்கள்.
இதையும் படிங்க: கோட் ஆடியோ லான்ச் இருக்கா?!.. விஜய் எடுத்த முடிவு சரியா?!.. அவ்ளோ பயமா?!…
மேலும், ஒன்றுமில்லாத அந்த படத்தில் சூரியை மிகவும் சிலாகித்து மிஷ்கின் பேசியதாக பலரும் சொன்னார்கள். அதிலும், சூரி ஒன்னுக்கு அடிப்பது போன்ற காட்சியில் சிறப்பாக நடித்திருந்ததாக அவர் பாராட்டியது கேலி கூத்தாகிப்போனது. மிஷ்கின் இப்போது விஜய் சேதுபதியை வைத்து டிரெய்ன் என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் விஜய் சேதுபதி பற்றி பேசியிருக்கும் மிஷ்கின் ‘இதயத்தை டச் பண்ணிக்கிட்டே இருக்கான் விஜய் சேதுபதி. எப்போதும் தன்மையாகவே இருக்கிறான். இந்தியாவில் இமேஜ் பார்க்காமல் இருக்கும் ஒரே நடிகன் அவன்தான், அவனை வைத்து ‘சேதுபதி பெரிய மனசுக்காரன்’ என ஒரு கிராமத்து படமே எடுக்கலாம். என் சொந்த தம்பியை விட அவனை என் இதயத்தில் வைத்திருக்கிறேன்’ என உருகியிருக்கிறார் மிஷ்கின்.