More
Categories: Cinema News latest news

மயிறு மாதிரி படம் எடுத்துருக்கன்னு திட்டுவாங்க… இயக்குனரின் பேச்சால் கடுப்பான மிஷ்கின்!..

தமிழ் சினிமா இயக்குனர்களில் சாதரண மசாலா படம் எடுக்கும் இயக்குனர்களை தாண்டி சினிமா மூலம் மக்களிடம் பல விஷயங்களை பேச நினைக்கும் இயக்குனர்கள் உண்டு. மாரி செல்வராஜ், பா.ரஞ்சித், வெற்றிமாறன் என மாறுப்பட்ட சினிமாவை கொடுக்கும் இயக்குனர்களில் மிஷ்கினும் முக்கியமான இயக்குனராவார்.

தமிழில் சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் மிஷ்கின். சித்திரம் பேசுதடி பெரிதாக வரவேற்பை பெறவில்லை. ஆனால் அந்த படத்தில் வந்த வாழ மீனுக்கும் வெளங்க மீனுக்கும் என்னும் பாடல் அப்போது பெரும் ஹிட் கொடுத்தது.

Advertising
Advertising
Mysskin

அதையடுத்து அஞ்சாதே படம் பெரும் ஹிட் கொடுத்தது. பிறகு மிஷ்கினின் மார்க்கெட் தமிழ் சினிமாவில் உயர துவங்கியது. தற்சமயம் டைனோசர் என்கிற திரைப்படத்திற்காக நடந்த விழாவில் கலந்துக்கொண்டார் மிஷ்கின்.

இந்த படத்தை எம்.ஆர் மாதவன் என்னும் இயக்குனர் இயக்கியுள்ளார். அவர் மேடையில் பேசும்பொழுது நான் கலைக்காக படம் எடுக்க வரவில்லை கலாய்க்கதான் படம் எடுக்க வந்தேன் என கூறியுள்ளார். இது மிஷ்கினுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

மிஸ்கினின் அறிவுரை:

எனவே அடுத்து மிஸ்கின் பேசும்போது “கலாய்க்க படம் எடுப்பது தவறு கிடையாது. ஆனால் கலைக்காகவும் படம் எடுக்க வேண்டும். அப்படி எடுக்கவில்லை எனில் வாழ்க்கை சுவாரஸ்யம் இல்லாமல் போய்விடும். வருங்காலத்தில் நமது படத்தை பார்த்து என்ன மயிறு மாதிரி படம் எடுத்துருக்காங்க என திட்டுவார்கள்.

சினிமாவில் எண்டர்டெயின்மெண்ட் படங்கள் எவ்வளவு முக்கியமோ அதே அளவு கலை படைப்புகளும் முக்கியம். எனவே இரண்டு வகையான படங்களையும் எடுக்க வேண்டும் என இயக்குனருக்கு அறிவுரை அளித்தார் மிஷ்கின்.

இதையும் படிங்க: கங்கை அமரனுக்கு வந்த முதல் வாய்ப்பு.. கெடுக்க நினைத்த இளையராஜா!.. இப்படியெல்லாம் நடந்துச்சா

Published by
Rajkumar