விஜய் சேதுபதிக்கு சாபமிட்ட மிஷ்கின்... இது கண்டிப்பா நடக்குமாம்... என்னப்பா இப்படியா?
நடிகர் விஜய் சேதுபதிக்கு இது நடந்தே தீரும் என இயக்குனர் மிஷ்கின் சாபமிட்ட ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கூத்துப் பட்டறையில் அக்கவுண்ட்டன் வேலையில் சேர்ந்த விஜய் சேதுபதிக்கு நடிப்பு மீது ஆர்வம் அதிகரித்து இருக்கிறது. தமிழ் சீரியலான பெண்ணில் நடித்தார். இருந்தும் அவருக்கான சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. தொடர்ந்து, கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்காக பல குறும்படங்களில் நடித்தார்.
அங்கிருந்து அவரின் கேரியர் தொடங்கியது. அதிலும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படங்களில் இவர் நடித்திருந்த படங்களில் நல்ல ஹிட் ஆனது. தொடர்ச்சியாக தமிழ் சினிமாவில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தார்.
இதையும் படிங்க: விஜய் சேதுபதியை ஒதுக்கி தள்ளிய லோகேஷ்… “கடைசியில் என் கிட்டத்தான் நீ வந்தாகனும்”… கெத்து காட்டிய மக்கள் செல்வன்…
2012ல் இவரின் கேரியரில் மிகப்பெரிய ஏற்றம் இருந்தது. ஒரே வருடத்தில் கார்த்திக் சுப்புராஜின் பீட்சா, பாலாஜி தரணிதரனின் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நளன் குமாரசாமியின் சூது கவ்வும் என மூன்று படங்களில் நாயகனாக நடித்தார். மூன்றுமே மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.
அதே ஃபார்முலாவை பிடித்துக்கொண்டவர் தொடர்ச்சியாக வருடத்திற்கு 4 முதல் 5 படங்களில் நடித்து வந்தார். இதில் சில தோல்வி படங்களை கொடுத்தாலும் விஜய் சேதுபதியின் கேரியரில் முன்னேற்றம் தான் ஏற்படுகிறது.
பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாகவும், மாஸ்டர் படத்தில் விஜயின் வில்லனாகவும், சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லன் என அவரின் சினிமாவின் கேரியர் மிகப்பெரிய ஏற்றத்தில் இருக்கிறது.
இந்நிலையில், இவர் தற்போது நடித்து வரும் படம் டிஎஸ்பி. 46வது படமாக இருக்கும் டிஎஸ்பியை பொன்ராம் இயக்கி வருகிறார். டி.இமான் இசையமைக்கும் இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.
அந்த நிகழ்ச்சியில் இயக்குனர் மிஷ்கின் பேசியது தற்போது வைரலாகி வருகிறது. இந்தியாவின் சிறந்த நடிகராக விஜய் சேதுபதி இருக்கிறார். அவர் விரைவில் ஹாலிவுட் படங்களில் நடிப்பார். இது எனது சாபம் என அவர் கூறி இருந்தார். நான் இயக்கி வெளியாக இருக்கும் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி சிறப்பு வேடத்தில் நடிக்க இருக்கிறார் என்றார்.