காதலியா நினைக்கனுமா? த்ரிஷா பத்தி மிஷ்கின் சொன்னதை கேளுங்க.. இதுதான் அல்டிமேட்

by Rohini |
mysskin
X

mysskin

Trisha Mysskin: சில தினங்களுக்கு முன் த்ரிஷாவை பற்றி தேவையில்லாத சில அவதூறு வார்த்தைகளை பேச அந்த அரசியல் பிரமுகர் மீது பல தரப்பில் இருந்து கண்டன குரல்கள் எழுந்தன. இதில் த்ரிஷாவும் தனது கண்டனத்தை தெரிவித்ததோடு அடுத்த இரு தினங்களிலேயே அந்த அரசியல் பிரமுகர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று,

ஒரு வக்கீல் நோட்டீஸையும் அனுப்பியிருந்தார். இதன் பிறகே நடிகர் சங்கத்தில் இருந்து அந்த சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக அவர்களது எதிர்ப்பை தெரிவித்தார். இந்த நிலையில் இயக்குனரும் நடிகருமான மிஷ்கின் இன்று ஒரு படவிழாவில் த்ரிஷா விவகாரம் குறித்து அவரது சோகத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இதையும் படிங்க: இந்த பாட்டை நான் பாட மாட்டேன்!.. சிவாஜி படத்தில் பாட மறுத்த பாடகர்!.. இப்பவரைக்கும் எவர் கிரீன் பாட்டு அது!..

அதாவது நடிகைகளை இப்படி பேசுவது முற்றிலும் தவறு என்றும் அவர்கள் இந்த நடிப்பை தங்கள் கடவுளாக நினைத்தே இந்த சினிமாவிற்குள் வந்திருக்கிறார்கள் என்றும் உங்கள் வீட்டு பெண்மணியாக இருந்தால் இப்படி பேசுவீர்களா என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

ஒரு செய்தி போடவேண்டும் என்பதற்காக நடிகையை அதுவும் அவர் ஒரு தாய் அல்லது பெண். ஒரு பெண்ணை பற்றி இப்படி பேசாதீர்கள். தயவு செய்து இப்படி பேசாதீர்கள். பத்திரிக்கைகளிலும் இப்படி எழுத வேண்டாம். நான் மிகவும் கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன். ஒரு நடிகையாக இருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?

இதையும் படிங்க: நான் இப்படி ஆனதுக்கு காரணமே அந்த படம்தான்!.. பல வருடங்கள் கழித்து புலம்பும் கிரண்…

இந்த செய்தி என்னை மிகவும் வருத்தத்தை அளித்தது. மற்றும் உங்கள் மகளாக நினைக்க வேண்டும். தங்கையாக நினைக்க வேண்டும். ஏன் காதலியாகக் கூட நினைக்கலாம். அதில் தவறு இல்லை. ஆனால் அந்த காதலிலும் ஒரு கண்ணியம் இருக்க வேண்டும். அதனால் ஒரு பெண்ணை பற்றி தவறாக பேச வேண்டாம். பெண்ணை அழ வைப்பது எவ்வளவு பெரிய துரோகம் தெரியுமா?

த்ரிஷாவை நான் இரண்டு முறை பார்த்து பேசியிருக்கிறேன். மிகவும் எளிமையான பெண். நல்ல முறையில் பழக கூடிய பெண். அதனால் இனிமேல் இப்படிப்பட்ட செய்திகளை தவிர்க்க வேண்டும். தேவையற்ற முறையில் பேசவும் வேண்டாம் என கேட்டுக் கொண்டார் மிஷ்கின்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் படத்தின் மீது பந்தயம் கட்டி கத்தையாக பணம் வாங்கிய நபர்!. அவர் சொன்னது அப்படியே நடந்துச்சே!..

Next Story