விஜய் தொடந்து நடிப்பார்!. சினிமாவை விட்டு போகமாட்டார்!. அட அவரே சொல்லிட்டாரே!…

#image_title
கோலிவுட்டின் முன்னனி மற்றும் முக்கிய இயக்குனராக இருப்பவர் விஜய். 1992ம் வருடம் அவரின் அப்பா எஸ்.ஏ.சி இயக்கிய நாளைய தீர்ப்பு படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். துவக்கத்தில் விஜயை வைத்து படமெடுக்க யாரும் முன்வரவில்லை என்பதால் அவரின் அப்பாவே தனது சொந்த பணத்தில் படங்களை எடுத்தார்.
அதன்பின் விக்ரமன் இயக்கத்தில் நடித்த பூவே உனக்காக திரைப்படம் விஜய்க்கு திருப்பு முனையாக அமைந்தது. அந்த படத்திற்கு பின் விஜயை வைத்து படமெடுக்க மற்ற இயக்குனர்கள் முன்வந்தார்கள். காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும், கில்லி என பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கினார்.

தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் இவருக்குதான் அதிக ரசிகர்களும் இருக்கிறார். இப்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் இருக்கிறார். அதேநேரம், இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்து வரும் ஜனநாயகன் தனது கடைசிப்படம் என விஜய் அறிவித்திருக்கிறார். இது திரையில் விஜயை ரசிப்பவர்களுக்கு சோகத்தை கொடுத்திருக்கிறது.
ஜனநாயகன் பட ஷூட்டிங் முடிந்தவுடன் விஜய் முழுநேர அரசியல்வதி ஆகவும் திட்டமிட்டிருக்கிறார். அனேகமாக தமிழகமெங்கும் அவர் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருக்கிறார் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை அவர் குறி வைத்திருக்கிறார். அந்த தேர்தலில் கணிசமான வாக்குகளை வாங்கி தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சியாக மாறவேண்டும் என்பதே அவரின் நோக்கமாக இருக்கிறது.

இந்நிலையில்தான் அவர் முன்பு நடித்த சச்சின் திரைப்படம் இன்று ரீரிலீஸ் ஆகியுள்ளது. தமிழகத்தில் கணிசமான திரையரங்குகளில் இப்படம் வெளியாகியுள்ளது. இந்த விழாவில் பேசிய இயக்குனர் மிஷ்கின் ‘விஜய் கலைத்துறையை விட்டு போக மாட்டார். அவர் நடிச்சிக்கிட்டேதான் இருப்பார் என நினைக்கிறேன். என்னை பொறுத்தவரைக்கும் அவர் அரசியலில் ஈடுபட்டுகொண்டே சினிமாவில் நடிக்கவேண்டும் என ஆசைப்படுகிறேன். அவரெல்லாம் சினிமா விட்டு போறது பெரிய நஷ்டம்.
கமல் சார், ரஜினி சார் ஆகியோர் சினிமாவை விட்டு போனால் நம்மால் ஏத்துக்கவே முடியாது இல்லையா. அந்த மாதிரி விஜய், அஜித் எல்லாம் எப்பவுமே நடிச்சிக்கிட்டேதான் இருக்கணும்னு ஆசைப்படுகிறேன்’ என பேசியிருக்கிறார்.