சும்மாதானே உட்கார்ந்திருக்க பிக் பாஸுக்காவது போ- பிரபல நடிகரை பங்கமாய் கலாய்த்து அனுப்பிய நெல்சன்!
“கோலமாவு கோகிலா” என்ற தனது முதல் திரைப்படத்தின் மூலமே வெற்றி இயக்குனராக உருவானவர் நெல்சன் திலிப்குமார். அதன் பின் “டாக்டர்”, “பீஸ்ட்” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் தற்போது ரஜினிகாந்தை வைத்து “ஜெயிலர்” திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
“பீஸ்ட்” திரைப்படம் வணீக ரீதியாக வெற்றிபெற்றிருந்தாலும் ரசிகர்களுக்கு அத்திரைப்படம் திருப்தியாக அமையவில்லை. ஆதலால் நெல்சனை வைத்து பல மீம்கள் இணையத்தில் உலா வந்தன. ஆதலால் “ஜெயிலர்” திரைப்படத்தை நெல்சன் மிக சிறப்பாக உருவாக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பிரபல நடிகரான கவின், சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது நெல்சன் திலிப்குமார் தன்னை கலாய்த்த சம்பவத்தை குறித்து மிகவும் கலகலப்பாக பகிர்ந்துகொண்டுள்ளார்.
நெல்சனிடம் உதவி இயக்குனர் ஆன கவின்
நடிகர் கவின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “கனா காணும் காலங்கள்”, “சரவணன் மீனாட்சி”, ஆகிய தொடர்களின் மூலமும் “பிக் பாஸ் சீசன் 3” நிகழ்ச்சியின் மூலமும் ரசிகர்களிடையே பரிச்சயமானார். “பீட்சா”, “இன்று நேற்று நாளை”, “சத்ரியன்” ஆகிய திரைப்படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்தார் கவின்.
அதனை தொடர்ந்து “நட்புன்னா என்னன்னு தெரியுமா?” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து “லிஃப்ட்”, “டாடா” ஆகிய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார் கவின். இதில் “டாடா” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
கவின் வளர்ந்து வந்த காலகட்டத்தில் தனக்கு நடிப்பதற்கான வாய்ப்பு இல்லாத போதெல்லாம் நெல்சனிடம் உதவி இயக்குனராக சேர்ந்துவிடுவாராம். அந்த வகையில் “டாக்டர்” திரைப்படத்தின் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது கவினுக்கு “பிக் பாஸ்” நிகழ்ச்சியில் இருந்து அழைப்பு வந்ததாம். அப்போது “பிக் பாஸ்” நிகழ்ச்சிக்கு போகலாமா வேண்டாமா என்ற குழப்பம் இருந்ததாம்.
ஆதலால் நெல்சனிடம், “பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கூப்புடுறாங்க, நான் போகவா” என கேட்க, அதற்கு நெல்சன் “இங்க என்ன பண்ணிட்டு இருக்க?” என கேட்க, அதற்கு கவின், “சும்மாதான் இருக்கேன்” என கூற, அதற்கு நெல்சன், “சும்மாதான இருக்க, அங்கயாவது போ” என கலாய்த்தாராம். அதன் பிறகுதான் கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றாராம்.
இதையும் படிங்க: திருமணத்துக்கு பிறகும் குவியுது பட வாய்ப்புகள்; இப்போ மட்டும் நயன்தாரா கைவசம் 10 படம் இருக்குதாம்