கோலமாவு கோகிலா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன். முதல் படத்திலேயே லேடிஸ் சூப்பர் ஸ்டாரை வைத்து இயற்கை மிகப்பெரிய வெற்றிப் படமாக கொடுத்திருந்தார். நெல்சனின் டார்க் காமெடி படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது.
விஜய் டிவியில் பிக் பாஸ் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை இயக்கி வந்த நெல்சன் சிம்புவை வைத்து வேட்டை மன்னன் எனக்கு படத்தை இயக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். ஆனால் கடைசியில் சிம்பு மற்றும் நெல்சன் படம் தொடங்காமல் நின்று போய்விட்டது.
இதையும் படிங்க: ஒரே ஓவர் பில்டப்பா இருக்கு!.. அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 தெறி மாஸா!.. வெறும் தூசா?.. எப்படி இருக்கு?..
அதன் பின்னர் சிம்புவின் முன்னாள் காதலியான நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கி இயக்குனரானார். அந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தை இயக்கி பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வெற்றியை பெற்றார்.
கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களைப் பார்த்து நெல்சன் இயக்கத்தின் மீது நம்பிக்கை வந்த நிலையில் தளபதி விஜய் பீஸ்ட் படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார். ஆனால் அதை சரியாக இயக்க முடியாமல் கெடுத்துவிட்டார் நெல்சன்.
இதையும் படிங்க: அஜித்தின் மாஸ்ஹிட் பாடலை குதறி கொடுத்த யுவன் ஷங்கர் ராஜா… திணறிய இயக்குனர்…
அந்த படம் மிகப்பெரிய ட்ரோல் மெட்டீரியல் ஆனாலும் ரஜினிகாந்த் நெல்சன் நம்பி ஜெயிலர் படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தார். எதிர்பார்த்தபடியே ஜெயிலர் திரைப்படம் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்து மிகப்பெரிய வெற்றி படமாக மாறியது.
அடுத்து ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் 2 படத்தை நெல்சன் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது லோகேஷ் கனகராஜ் போல நெல்சன் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். ஃபிலமன்ட் பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை தற்போது தொடங்கியுள்ள நெல்சன் வரும் மே மூன்றாம் தேதி தனது முதல் படத்தின் அறிவிப்பை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கலைஞர் முன் அஜித் பேசிய ’அந்த’ சம்பவம்… பிரச்னைக்கு காரணமான ஷாலினி… என்ன நடந்தது?
Vikram: தமிழ் சினிமாவில்…
கடந்த 14…
Vijay tv:…
Rj Balaji:…
விமர்சனம் செய்வது…