சிவாஜியின் சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய பழம்பெரும் இயக்குனரின் வாரிசுக்கு இப்படி ஒரு நிலைமையா?… அடப்பாவமே!

by Arun Prasad |   ( Updated:2023-04-09 12:10:39  )
sivaji
X

sivaji

“அன்னை இல்லம்”, “தெய்வத்தாய்”, “வியட்நாம் வீடு”, “தங்கப்பதக்கம்” போன்ற தமிழ் சினிமாவின் பல முக்கிய திரைப்படங்களை இயக்கியவர் பி.மாதவன். இவர் முதன்முதலில் இயக்கிய திரைப்படம் “மணி ஓசை”. இவர் கிட்டத்தட்ட 49 திரைப்படங்களை இயக்கியுள்ளார். 35க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

பெரும் சொத்துக்கு சொந்தக்காரர்

இவர் அக்காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குனராக வலம் வந்தார். அப்போது சென்னை வலசரவாக்கத்தில் அவருக்கு ஐம்பது கிரவுண்ட் நிலம் சொந்தமாக இருந்ததாம். மேலும் சென்னை மௌப்ரேஸ் சாலையில் ஐந்தரை கிரவுண்ட் நிலம் இருந்ததாம். இது போக சென்னை தியாகராஜ நகர், கோபாலபுரம் ஆகிய பகுதிகளில் தலா ஒரு வீடும் இருந்ததாம்.

வீட்டு வாடகை கூட கொடுக்க முடியவில்லை..

ஆனால் அவருடைய வாரிசுகளான அவரது மகன்கள், தற்போது தங்கியிருக்கும் வீட்டிற்கு வாடகை கூட அளிக்க முடியாத நிலையில்தான் இருக்கிறார்களாம். இந்த செய்தியை பகிர்ந்துகொண்ட சித்ரா லட்சுமணன், பி.மாதவனின் மகன்களுக்கு உதவி செய்ய மக்களால் ஆன பண உதவிகளை செய்யுமாறு கேட்டுக்கொண்டு அவர்களின் வங்கு கணக்கு விபரங்களை தனது யூட்யூப் வீடியோவில் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய புகழை சேர்த்த பி.மாதவனின் வாரிசுகள் இவ்வாறு தங்களது சொத்துக்களை இழந்து வீட்டு வாடகை கூட கொடுக்கமுடியாத நிலையில் இருப்பதை கேள்விப்பட்ட ரசிகர்கள் தங்களது வருத்தங்களை பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: இந்த நடிகர் சொந்தமா வீடு வாங்கக்கூடாது- தடை போட்ட கலெக்டர்… அப்படி என்ன நடந்திருக்கும்!

Next Story