எம்ஜிஆர் செய்த தவறு.. இயக்குனருக்கு சைகை மூலம் சுட்டிக் காட்டிய பி.வாசு!.. நடந்த சம்பவம் வேற லெவல்..
80,90 களில் மிகப்பெரிய கமெர்ஷியல் ஹிட் கொடுத்த இயக்குனர்களில் முக்கியமானவர் பி.வாசு. இவரது இயக்கத்தில் ரஜினி, விஜயகாந்த் , சத்யராஜ் போன்ற முன்னனி நடிகர்களை வைத்து படம் இயக்கியவர்.
மன்னன், சேதுபதி ஐபிஎஸ், நடிகன், சின்ன தம்பி போன்ற மாஸ் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். கிட்டத்தட்ட 64 படங்களை இயக்கி தவிர்க்க முடியாத இயக்குனரின் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார் பி.வாசு. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிகளிலும் பல படங்களை இயக்கியுள்ளார்.
ஆரம்பத்தில் உதவி இயக்குனராக சிவாஜி, எம்ஜிஆர் போன்றோர் படங்களில் பணியாற்றியிருக்கிறார் வாசு. எம்ஜிஆரின் நடிப்பில் வெளிவந்த படமான ‘மீனவ நண்பன்’ படத்தில் உதவி இயக்குனராக இருந்திருக்கிறார். அப்போது அந்த படப்பிடிப்பில் நடந்த ஒரு சுவராஸ்ய சம்பவம் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
இதையும் படிங்க : சிவாஜிக்கு பயந்து பின் வாசல் வழியாக ஓடிய விஜய்… அதுக்கப்புறம் நடந்ததுதான் ஹைலைட்…
1977ஆம் ஆண்டில் வெளிவந்த மீனவ நண்பன் படத்தை ஸ்ரீதர் இயக்க எம்.எஸ்.வி இசையமைக்க படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக லதா நடித்திருந்தார். இந்த படத்தின் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டிருந்தபோது எம்ஜிஆர் வாயசைக்கவே இல்லையாம்.
அதை பார்த்து விட்டாராம் வாசு. ஆனால் ஸ்ரீதர் ‘டேக் ஓகே’ என்று சொல்லிவிட்டாராம். ஆனால் வாசு எம்ஜிஆரின் பின்னாடி நின்று கொண்டு ஸ்ரீதரிடம் தன் சைகை மூலம் சொல்லியிருக்கிறார். அதை புரிந்து கொண்ட ஸ்ரீதர் மறுபடியும் ‘ஒன்மோர்’ என்று எம்ஜிஆரிடம் சொல்ல ‘ஏன்’ என்று கேட்டாராம்.
கேமிரா சரியில்லை, மறுபடியும் எடுக்க வேண்டும் என்று கேட்க எம்ஜிஆர் மீண்டும் நடித்துக் காட்டிவிட்டி வாசுவை பார்த்து ‘என்ன வாசு இப்போ ஓகே யா?’ என்று கேட்டாராம் எம்ஜிஆர். அவ்ளோதான் வாசுவுக்கு வெளவெளத்து விட்டதாம். வாசுவும் ஓகே சார் என்று சொன்னாராம். வாசு சைகை காட்டியதை எப்படியோ எம்ஜிஆர் புரிந்து கொண்டு செய்த தவறை திருத்திக் கொண்டார்.