Goundamani
கோவையை சேர்ந்தவர் சுப்பிரமணி. நிறைய நாடகங்களில் நடித்து வந்தார். நாடகங்களில் நடிக்கும் போது எதிரே நடிப்பவர் என்ன வசனம் சொன்னாலும் அதற்கு பதில் கவுண்டர் கொடுப்பதால் இவரின் பெயர் கவுண்டர் மணியாக மாறியது. பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே படத்தில் இவர் ரஜினியுடன் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்த போது டைட்டில் கார்டில் இவரின் பெயர் கவுண்டமணி என தப்பாக போட அதுவே அவரின் பெயராக மாறிவிட்டது.
அதன்பின் பல திரைப்படங்களிலும் நடித்தார் கவுண்டமணி. ஒரு இடத்தில் செந்திலையும் தன்னோடு சேர்த்துக் கொண்டு காமெடி காட்சிகள் மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்தார். ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக மாறினார் கவுண்டமணி. சில படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். சத்யராஜ், பிரபு, சரத்குமார், கார்த்திக், ராமராஜன் போன்ற படங்களில் வெற்றிக்கு கவுண்டமணியின் காமெடி முக்கிய காரணமாக இருந்தது.
இவர் பல படங்களில் காமெடி செய்திருந்தாலும் பி.வாசு இயக்கத்தில் நடித்த எல்லா படங்களிலுமே காமெடி ஹைலைட்தான். மன்னன், நடிகன், உழைப்பாளி, சின்னத்தம்பி, கிழக்குக்கரை என சொல்லிக் கொண்டே போகலாம்.
இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய இயக்குனர் பி.வாசு ‘கவுண்டமணி சார் எப்போதுமே தனது காருக்கு டிரைவரை வைத்துக் கொண்டது இல்லை.. அவருக்கு மேனேஜரும் இல்லை.. ஏன்.. அவரிடம் ஒரு டைரி கூட கிடையாது.. எப்போ நடிக்க வரணும் என்கிற தேதியை சொல்லிவிட்டால் அதை மனசுல வச்சுப்பார்.. அவரே வண்டியை ஓட்டிக்கொண்டு சரியான நேரத்துக்கு வந்து விடுவார்.. அது மாதிரி ஒரு அருமையான எளிமையான ஒருத்தரை தமிழ் சினிமாவில் நான் பார்த்ததில்லை’ என்று ஃபீல் பண்னி பேசியிருக்கிறார்.
அமராவதி திரைப்படம்…
நடிகர் விஜயகாந்துக்கும்…
ரசிகர்களால் சூப்பர்ஸ்டார்…
கோலிவுட்டில் உள்ள…
தமிழ் சினிமாவில்…