குப்பை படத்தை வெற்றின்னு சொல்வாங்க.... காலா படம் எந்த விதத்தில் தோல்வி? சீறிய இயக்குனர்

by sankaran v |   ( Updated:2024-12-06 03:26:59  )
kaala
X

kaala

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய படம் காலா. இந்தப் படம் கபாலி மாதிரி பெரிய அளவில் ஹிட் இல்லை. ரசிகர்கள் மத்தியிலும் பெரிய அளவில் வரவேற்பில்லை. தோல்விப்படம்னு பலரும் சொன்னார்கள்.

மெட்ராஸ் படத்தை இயக்கி சினிமாவில் அழுத்தமாகக் கால் பதித்தவர் பா.ரஞ்சித். இவரது படங்கள் எல்லாமே சாதி ரீதியானவை என சொல்வதுண்டு. குறிப்பாகத் தலித் இன மக்களுக்கு ஆதரவாக பல படங்களை எடுத்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் கூட தலித்னா கருப்பா தான் இருப்பாங்களா? என் பாட்டி கூட வெள்ளை தான் என பொங்கி எழுந்துள்ளார்.

இவரது படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவை தான். ரஜினியை வைத்து கபாலி, காலா என இரு படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய முதல் படமான அட்டகத்தி ரொம்பவே பேசப்பட்டது. கார்த்தி கதாநாயகனாக நடித்த மெட்ராஸ் படமும் பெரும் வெற்றி பெற்றது.

paranjith

paranjith

இவரது சார்பட்டா பரம்பரை படமும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. தங்கலான் படத்திற்கு இவர் போட்ட உழைப்பு பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை. அந்த வகையில் தற்போது ரஜினி நடித்த காலா படம் எப்படி தோல்வின்னு சொல்றீங்க என சீறிப்பாய்ந்துள்ளார். என்னன்னு பார்ப்போமா...

குப்பை படத்தை வெற்றின்னு சொல்வாங்க. காலா படம் கமர்ஷியல் ரீதியாக சக்சஸ் தான். எதை வைத்து இவங்க இந்த படத்தை சக்சஸ் இல்லன்னு சொல்றாங்க? வசூலை வைத்து தான. வசூல் இல்லைன்னா தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் இருக்கணும். ஆனா இந்த படத்தால தயாரிப்பாளர்களுக்கு நஷ்டமில்லை. அப்போ இந்தப் படம் வெற்றி படம் இல்லையா?

Also read: Pushpa 2: கேஜிஎப் 2, பாகுபலி2, ஆர்ஆர்ஆர் ஐ தூக்கி சாப்பிட்ட புஷ்பா 2… முதல் நாள் கலெக்ஷன் இத்தனை கோடிகளா?

இதுவே மத்த படம் கமர்ஷியலா வெற்றி பெற்றிருந்தா அது குப்பை படமாவே இருந்தாலும் வெற்றின்னு சொல்லி இருப்பாங்க. ஆனால், என் படத்தை இது வெற்றி, இது தோல்வின்னு எழுதுவதில் கூட இவங்களுக்கு நிறைய பிரச்சனை இருக்கு என்று படபடவென பொரிந்துள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித்.

சில படங்கள் சமூகவலைதளங்கள் வந்தபிறகு விமர்சனங்களால் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. சிலர் குப்பைப் படத்தைக்கூட நல்லாருக்கு. அப்படி இருக்கு. இப்படி இருக்குன்னு விமர்சனம் பண்ணி ஓடவிடுறாங்க. ஆனால் படம் ஓடாமல் தோல்வியை அடைகிறது.

தவறான விமர்சனம்

Also read: கமல் நடிச்சிருக்கனும்.. பாடல் ஹிட்டாகி படம் ஓடாததற்கு இதான் காரணமா? என்ன படம் தெரியுமா?

அதை எல்லாம் பெரிய அளவில் யாரும் குறை சொல்வதில்லை. சமீபத்தில் வெளியான கங்குவா படத்தின் தோல்விக்குக் கூட விமர்சனங்கள் பெரிதாக சர்ச்சைக்குள்ளாயின. அதே நேரம் நல்ல படங்களையும் சில குறிப்பிட்ட காரணங்களுக்காகத் தவறான விமர்சனம் செய்து அதன் வரவேற்பைக் குலைத்து விடுகின்றனர். இது கண்டு தான் இயக்குனர் பா.ரஞ்சித்தும் பொங்கி எழுந்துள்ளார் என்றே தெரிகிறது.

Next Story