இரவில் செக்யூரிட்டி.. பகலில் ஆபிஸ் பாய்!.. படாதபாடு பட்ட பாண்டிராஜ்…

0
1296
pandiraj

இயக்குனர் மற்றும் நடிகர் சசிக்குமாரின் தயாரிப்பில் வெளிவந்த பசங்க திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பாண்டிராஜ். இப்படத்தில்தான் நடிகர் விமல் ரசிகர்களுக்கு அறிமுகமானார். 4 சிறுவர்களை வைத்துக்கொண்டு அழகாக திரைக்கதை அமைத்திருந்தார். மிகவும் குறைவான பட்ஜெட்டில் உருவான இப்படம் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது. மேலும், தமிழக அரசு விருது உள்ளிட்ட பல விருதுகளையும் இப்படம் பெற்றது.

pasanga

அடுத்ததாக அருள்நிதி நடிப்பில் வம்சம் படத்தை இயக்கியிருந்தார். அடுத்து, விஜய் டிவியில் ஆங்கராக இருந்த சிவகார்த்திகேயனை மெரினா என்கிற படத்தில் அறிமுகப்படுத்தினார். கோலிசோடா படத்திற்கு கதை எழுதியவர் இவர்தான். அடுத்து பசங்க 2, இது நம்ம ஆளு, கதகளி, கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை, எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களை இயக்கியிருந்தார்.

இதையும் படிங்க: மகள் திருமணத்தை நடத்த முடியாமல் தவித்த கண்ணதாசன்!.. கடவுள் மாதிரி வந்த பாட்டு!..

பாண்டிராஜ் புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிமலையை சேர்ந்தவர். சினிமா இயக்குனர் ஆகும் ஆசையில் சென்னை வந்து வாய்ப்பு தேடினார். ஆனால், எந்த இயக்குனரும் இவரை உதவியாளராக சேர்த்துக்கொள்ளவில்லை. எனவே, வாழ்வாதாரத்துக்காக ஏவிஎம் ஸ்டுடியோ நிறுவனத்தில் இரவு நேர செக்யூரிட்டியாக வேலை செய்துள்ளார். மேலும், இயக்குனர் மற்றும் நடிகர் பாக்கியராஜின் பாக்யா இதழ் அலுவலகத்தில் ஆபிஸ் பாயாகவும் வேலை செய்தார்.

pandiraj

பாண்டிராஜ் கவிதைகளும் எழுதுவார். அதை பார்த்த பாக்கியராஜ் அவரின் கவிதைகளை பாக்யா இதழில் வெளியிட்டார். அதன்பின் எடிட்டோரியல் பிரிவில் அவருக்கு வேலை கிடைத்தது. அதன் பின்னரே இயக்குனர் சேரனிடம் உதவியாளராக சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பனை மரத்துக்கு அடியில் நின்று பாலைக் குடித்தாலும்… பிளே பாய் நடிகரால் தரம்கெட்ட நடிகை!

google news