சூரிக்கு பல கோடி சம்பளம்!.. சாலிகிராமத்த விலைக்கு வாங்க போறாரு!.. பார்த்திபன் நக்கல்!..

by சிவா |
soori
X

தமிழ் சினிமாவில் ஹீரோவின் நண்பர்களில் ஒருவராக நடிக்க துவங்கியவர் சூரி. சொந்த ஊர் மதுரை. சினிமாவில் நடிக்கும் ஆசையில் வந்தவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, கிடைக்கும் வேலைகள் எல்லாவற்றையும் செய்து வந்தார். சென்னையில் பல கட்டிடங்களுக்கு சுண்ணாம்பும், பெயிண்டும் அடித்திருக்கிறார் சூரி.

இப்படி கஷ்டப்பட்டுதான் சென்னையில் தாக்கு பிடித்தார். வெண்ணிலா கபடிக்குழு படத்தில் இடம் பெற்ற பரோட்டா சாப்பிடும் போட்டி சம்பந்தப்பட்ட காட்சிகள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற சூரி பரோட்டா சூரியாக மாறினார். மேலும், சிவகார்த்திகேயனுடன் கூட்டணி போட்டு சூரி நடித்த படங்களும் சூப்பர் ஹிட் அடித்தது.

இதையும் படிங்க: ‘இந்தியன் 2’ படத்தை பார்த்தாரா? இல்லையா? படத்தை பற்றி பார்த்திபன் சொன்ன விஷயம்

குறிப்பாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரியும், சிவகார்த்திகேயனும் அடித்த லூட்டி ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. அதேபோல், ரஜினி முருகன் படத்தில் இருவருக்குமான காமெடி காட்சி ரசிகர்களை சிரிக்க வைத்தது. அதன்பின் பல திரைப்படங்களிலும் காமெடி காட்சிகளில் நடித்தார் சூரி.

ஜில்லா படத்தில் விஜயுடனும், வேதாளம் படத்தில் அஜித்துடனும், அஞ்சான் படத்தில் சூர்யாவுடனும் நடித்தார். அப்படி அவர் நடித்து கொண்டிருந்த போதுதான் விடுதலை திரைப்படம் மூலம் அவரை ஹீரோவாக மாற்றினார் வெற்றிமாறன். இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்தார் சூரி.

அந்த படத்தின் வெற்றிக்கு பின் சில படங்களில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். அப்படி வெளியான கருடன் படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. எனவே, தொடர்ந்து ஹீரோவாக மட்டுமே நடிப்பேன். இனிமேல் காமெடி காட்சிகளில் நடிக்க மாட்டேன் என அறிவித்துவிட்டார். சமீபத்தில் வெளிநாட்டில் ஸ்டைலாக கண்ணாடி அணிந்து சூரி அமர்ந்திருந்த புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய பார்த்திபன் ‘சூரியை இப்படி பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது. கிராமத்தில் இருந்து சென்னை வந்து அவர் அடைந்துள்ள உயரம் ஆச்சர்யமாக இருக்கிறது. இப்போது அவரின் சம்பளம் 8 கோடி. முன்பு சாலிகிராமத்தில் இடம் வாங்கினார். இப்போது சாலிகிராமத்தையே விலை பேசிக்கொண்டிருக்கிறார்’ என சிரித்தபடியே சொன்னார் பார்த்திபன்.

Next Story