தேடி வந்த அஜித் பட வாய்ப்பு! விஜயிடம் அனுமதி கேட்ட இயக்குனர் - தளபதி சொன்னதுதான் ஹைலைட்

by Rohini |   ( Updated:2023-05-30 11:51:25  )
ajith
X

ajith

தமிழ் சினிமாவில் விஜய் அஜித் என இரு பெரும் துருவங்களாக சினிமாவை ஆட்சி செய்து வருகின்றனர். இருவருக்கும் உள்ள ரசிகர் பட்டாளங்களை நினைத்து மற்ற நடிகர்கள் வாயை பிளந்ததும் உண்டு. அந்த அளவுக்கு விஜய் அஜித் அவர்களின் வளர்ச்சி சினிமாவையே பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.

ajith1

ajith1

இருவருமே ஒன்றாக சினிமாவிற்குள் நுழைந்தவர்கள். சமமான வெற்றி தோல்விகளை பார்த்தவர்கள். இருவரும் சேர்ந்து ஒரே ஒரு படத்தில் மட்டுமே ஒன்றாக நடித்திருக்கின்றனர். அதன் பிறகு நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றதும் தனித்தனியாக தங்களுடைய திறமையை காட்ட ஆரம்பித்து விட்டனர்.

இன்றைய சூழ்நிலையில் இவர்களுக்குள் போட்டிகள் பொறாமைகள் மனதளவில் இல்லாவிட்டாலும் தொழில் முனையில் ஒரு போட்டி இருந்து கொண்டே வருகின்றன. அதையும் தாண்டி இவர்களின் ரசிகர்களுக்கும் இணைய வழியாக சண்டைகள் நடந்து கொண்டு வருகின்றன.

ajith2

ajith2

இந்த நிலையில் இயக்குனர் பேரரசு ஒரு சமயம் ஏவிஎம் ஸ்டுடியோவில் நின்று கொண்டிருந்தாராம். சரவணன் பேரரசுவிடம் " நாங்கள் அஜித்தை வைத்து ஒரு படம் தயாரிக்க இருக்கிறோம். அதை நீங்கள் இயக்குகிறீர்களா?" என கேட்டதும் பேரரசுவிற்கு அதிர்ச்சியாகி விட்டதாம்.

வாய்ப்புக்காக அலைந்த பேரரசுவிற்கு தானாக இந்த வாய்ப்பு அமைந்ததும் பேரரசுவிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லையாம். உடனே கையில் பத்து லட்சத்தை கொடுத்து நீங்கள் தான் இந்த படத்தில் இயக்குனர் என ஏவிஎம் சரவணன் சொல்லி இருக்கிறார்.

ajith3

ajith3

அதுவரை பேரரசுவை விஜயின் ஆஸ்தான இயக்குனர் என்றே அழைத்துக் கொண்டு இருந்தனர். அதனால் பேரரசு நேராக விஜய் இடம் போய் "அஜித்தை இயக்கும் வாய்ப்பு எனக்கு வந்திருக்கிறது. என்ன சொல்வது என்று தெரியவில்லை" என கேட்டாராம்.

உடனே விஜய் "இதில் என்ன யோசிக்க இருக்கிறது .உடனே கிளம்புங்கள். நல்ல ஒரு வாய்ப்பு. நல்ல ஒரு நிறுவனம். போய் அந்த படத்தை இயக்கும் வேலையை பாருங்கள்" என சொன்னாராம் விஜய். அந்தப் படம் தான் திருப்பதி திரைப்படம். இந்த தகவலை பிரபல தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் கூறினார்.

Next Story