latest news
உனக்கு 200 ரூபா பெருசுன்னா ஏன் FDFS போற?!.. ரசிகர்களை திட்டும் விஜய் பட இயக்குனர்!…
Kanguva: ஒரு திரைப்படத்தின் மீதான விமர்சனம் என்பது காலம் காலமாக இருக்கிறது. 1950களில் துவங்கி பல வருடங்களாக திரைப்படங்கள் பற்றிய விமர்சனங்களை பத்திரிக்கைகளில் எழுதுவார்கள். வார இதழ்களில் விமர்சனங்கள் எழுதப்படும். ஆனால், அப்போதெல்லாம் திரைப்படங்கள் மட்டுமே ரசிகர்களின் முக்கிய பொழுதுபோக்காக இருந்ததால் படத்தின் வசூலை விமர்சனங்கள் பாதிக்கவில்லை.
இப்படித்தான் 60 வருடங்களுக்கும் மேல் சினிமா பயணித்தது. ஆனால், தற்போது எல்லோர் கையிலும் ஸ்மார்ட் போன் வந்துவிட்டது. யுடியூபில் எல்லோரும் வீடியோ பார்க்கிறார்கள். 10 வருடங்களுக்கு முன்பே சிலர் யுடியூப்பில் புதிய திரைப்படங்களை விமர்சனம் செய்ய துவங்கினார்கள்.
இதையும் படிங்க: சூர்யாவிடம் நஷ்ட ஈடு கேட்டாரா ஞானவேல் ராஜா?… சிவா பண்ண வேலை!… பொங்கிய பயில்வான்!…
அது ரசிகர்களிடம் வரவேற்பை பெறவே புளூசட்ட மாறன் போன்றவர்கள் வந்தார்கள். ஒரு படத்தில் குறையை எல்லோரும் நாசுக்காக சொல்வார்கள். நிறைகளை பாராட்டுவார்கள். ஆனால், விமர்சனம் என்கிற பெயரில் மொத்த படத்தையும் நக்கலடித்து வீடியோ போடுவதுதான் மாறனின் ஸ்டைல். பல லட்சம் பேர் அவரின் வீடியோக்களை பார்க்கிறார்கள். அதனால் அவருக்கு பணமும் கிடைக்கிறது.
படம் வந்த முதல் நாளே இப்படி எதிர்மறை விமர்சனங்களை பார்க்கும் ரசிகர்கள் பலரும் படத்தை பார்க்காமல் தவிர்த்துவிடுகிறார்கள். இதனால், வசூல் அதிக அளவில் பாதிக்கிறது. கமலின் இந்தியன் 2 மற்றும் சூர்யாவின் கங்குவா படங்களுக்கு இப்படித்தான் நடந்தது. படம் பிடிக்குமா பிடிக்காதா என்பதை படம் பார்க்கும் ரசிகர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். யுடியூப்பில் ஒருவர் சொல்வதை கேட்டு நாம் முடிவு செய்யக்கூடாது என்பதே திரையுலகினரின் பார்வையாக இருக்கிறது.
இதையும் படிங்க: இது நடக்கும் என நினைத்தேன்… கனத்த இதயத்துடன் ஏ.ஆர்.ரஹ்மானின் பதிவு… எப்படி இருந்த மனுஷர்?
கங்குவா படம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்ததால் இனிமேல் தியேட்டரில் முதல் காட்சிக்கு யுடியூப் சேனல்களை அனுமதிக்க வேண்டாம் என தியேட்டர் அதிபர் சங்க தலைவர் கூறியிருக்கிறார். அல்லது பாசிட்டிவ் விமர்சனங்களை மட்டுமே ஒளிபரப்பும் சேனல்களை அனுமதிக்கலாம் எனவும் யோசித்து வருகிறார்கள்.
இந்நிலையில், விஜயை வைத்து திருப்பாச்சி, சிவகாசி போன்ற படங்களை இயக்கிய பேரரசு ஒரு விழாவில் பேசியபோது ‘200 ரூபாயும், 3 மணி நேரமும் பெரிது என நினைப்பவர்கள் முதல் நாள் முதல் காட்சிக்கு ஏன் சொல்கிறீர்கள்?.. படத்தை பற்றி விசாரித்துவிட்டு 2 நாட்கள் கழித்து செல்லாதது உங்கள் தவறு’ என பேசியிருக்கிறார்.