சமீப காலமாக சமூக வலைதளங்களில் பெரிய பிரச்சனையாக இருப்பதே சூப்பர் ஸ்டார் விவகாரம் தான். விஜய் படங்கள் தான் அதிகமாக வசூல் செய்கிறது. எனவே அவர் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று ஒரு சிலர் கூறியதும், அதற்கு ரஜினி ரசிகர்கள் எப்போதுமே ரஜினி மட்டும் தான் சூப்பர் ஸ்டார் என்று கூறி வந்தனர்.
சமூக வலைதளங்களில் ரஜினி மற்றும் விஜயின் ரசிகர்கள் சண்டை போட்டுக்கொண்டிருந்த சமயத்தில், ஜெயிலர் படத்தில் ஆடியோ லாஞ்ச் விழாவில், ரஜினி சொன்ன காக்கா கழுகு கதை விஜய்க்காக தான் என்று சிலர் கூறிவந்தனர். இதனால் இந்த பிரச்சனை மேலும் பெரிதாகிவிட்டது என்றே கூறலாம்.
இதையும் படிங்க- ரஜினி-விஜய் போட்டியால் தனிமைப்படுத்தப்பட்ட அஜித் – கெத்தை காட்ட அந்த முயற்சியில் இறங்கப் போகும் தல
இதனால், கடுப்பான ஒரு சில விஜய் ரசிகர்கள், ஜெயிலர் படத்தை புறக்கணிக்க போவதாகவும், இந்த படத்தை தோல்வி அடைய செய்யப்போவதாகவும் கூறி வந்தனர். ஜெயிலர் திரைப்படம் 10ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த பிரச்சனை குறித்து இயக்குநர் பேரரசு சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.
அதில் ரஜினிகாந்த் என்று கூறுவதை விட சூப்பர் ஸ்டார் என்று தான் நாம் பலமுறை கூறியிருக்கிறோம். அப்படி இருக்கும்போது, விஜய் மட்டுமில்லை, வேறு எந்த நடிகரும் சூப்பர் ஸ்டார் கிடையாது. ரஜினிகாந்த் தான் சூப்பர் ஸ்டார். விஜய் கூட இதையெல்லாம் விரும்பமாட்டார்.
முன்பெல்லாம் கூட நடிகர்களுக்கிடையே போட்டி இருந்தது தான். ஆனால் அது இப்படி இருக்காது. அஜித் ரசிகர்களும் விஜய் படத்தை பார்ப்பார்கள். விஜய் ரசிகர்களும் அஜித் படத்தை பார்ப்பார்கள். பார்த்துவிட்டு, பிடித்திருக்கிறது பிடிக்கவில்லை என்று கூறுவது சரி. ஆனால் படத்தை புறக்கணிப்பது மிகவும் தவறான விஷயம்.
ஆந்திராவில் எல்லா நடிகர்களும் மிகவும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். அவர்களை பார்த்து தமிழ் நடிகர்களும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று இயக்குநர் பேரரசு அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க- ரஜினி விஜய் ரெண்டு பேரையும் வச்சி!.. நெல்சனுக்கு வந்த விபரீத ஆசை!. வொர்க் அவுட் ஆகுமா?!..
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…
Vijay antony:…
தமிழ் சினிமாவில்…
ரஹ்மான் மற்றும்…