Connect with us

சத்யராஜ் அவர்களே நீங்கள் யார் தியாகியா? – சத்யராஜுக்கு பதிலடி கொடுத்த பேரரசு

perarasu-satyaraj

latest news

சத்யராஜ் அவர்களே நீங்கள் யார் தியாகியா? – சத்யராஜுக்கு பதிலடி கொடுத்த பேரரசு

தமிழக அரசியலில் திரைத்துறை பிரபலங்களின் வருகையும், விமர்சனங்களும் எப்போதும் பேசுபொருளாகவே இருந்து வருகின்றன. அந்த வகையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீவிர ஆதரவாளரான நடிகர் சத்யராஜ், சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள கருத்துக்கள் சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியுள்ளன.

நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய சத்யராஜ், சமீபகாலமாகப் பெரிய நடிகர்களின் பொதுக்கூட்டங்களுக்குப் பெருமளவில் மக்கள் கூடுவதைக் குறிப்பிட்டுப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

சினிமா நடிகரைப் பார்க்கக் கூட்டம் வருவது சகஜம். ஆனால், அந்தக் கூட்டத்தில் இருப்பவர்கள் தங்கள் மனசாட்சிப்படி நடந்துகொண்டால், நிச்சயமாக ‘உதயசூரியன்’ சின்னத்திற்குத்தான் ஓட்டுப் போடுவார்கள். இதில் எந்த மாற்றமும் இல்லை. மேலும் போட்டி உங்களுக்கும் எங்களுக்கும் கிடையாது. போட்டி சமூக நீதிக்கும், சனாதனத்திற்கும்தான் என்று கூறினார். இது விஜயை மறைமுகமாக தாக்கி பேசியதாக தெரிகிறது. சமூக வலைதளங்களில் சத்யராஜின் இந்தப் பேச்சுக்கு திமுக தொண்டர்கள் பலத்த வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில், மாற்றுக் கட்சியினர் இது வெறும் அரசியல் காழ்ப்புணர்ச்சி என விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல இயக்குனர் பேரரசு சத்யராஜின் அந்த பேச்சு குறித்து பதிலளித்துள்ளார். அதில்,

திரு.சத்யராஜ் அவர்களே நீங்கள் யார் தியாகியா? அரசியல்வாதியா? திரைப்பட நடிகரா ? சினிமா தொழிலில் இருந்து கொண்டு நடிகர்களை இனி மேலும் சிறுமைப்படுத்தி பேசாதீர்கள்! உங்கள் மகளுக்கு திமுகவில் பதவி கிடைத்தது எப்படி? தியாகி சத்யராஜ் மகள் இன்று முறையிலா கிடைத்தது?
பிரபல நடிகர் மகள் என்று முறையில் தான் உங்கள் மகளுக்கு பதவி கிடைத்தது. உங்களை மேடையில் உட்கார வைத்ததின் காரணம் என்ன?
மக்களுக்காக பல போராட்டங்களை கண்டவரா? இல்லை மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதியா?


உங்களை மேடை ஏற்றியதற்கான தகுதி என்ன? நீங்கள் ஒரு பிரபல திரைப்பட நடிகர் என்று ஒரே காரணம்தான்!
ஒரு கட்சிக்கு ஆதரவாக பேசுங்கள் அது உங்கள் விருப்பம், அது தவறில்லை.
நடிகர்கள் என்றால் அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது, அவர்கள் முட்டாள்கள் என்ற தோரணையில் ஒரு நடிகராய் இருந்து கொண்டு நீங்க பேசாதீர்கள். இந்த கருத்து உங்கள் முகத்திற்கே முன்னேயும் திரும்பும். திரைத்துறையை சார்ந்தவர்கள் பல கட்சிகளில் இருக்கலாம். ஆனால் எந்த துறை, எந்த தொழில் நமக்கு சோறு போட்டதோ அந்த தொழிலுக்கு எதிராக இருக்கக் கூடாது! இன்னொன்று சமூக நீதிக்கும் சனாதனத்திற்கும் போட்டியே வராது.
ஏனென்றால் சனாதனம் என்பது சமூக நீதிதான்
என்று கூறியுள்ளார்.

To Top