அவங்களுக்கு 10 வருஷம்! ஆனால் விஜய்க்கு 10 மாசம் போதும்.. கணித்து சொன்ன பேரரசு

by Rohini |   ( Updated:2024-09-07 02:43:46  )
perarasu
X

perarasu

Perarasu: விஜயின் சினிமா கெரியரில் முக்கிய அங்கம் வகித்தவர் இயக்குனர் பேரரசு. விஜயை ஒரு கமெர்ஷியல் ஹீரோவாக்கி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்ததில் பேரரசுவின் பங்கு மிக முக்கியமானது. விஜயின் திரைப்பட வரலாறில் முக்கிய படங்களாக இருக்கும் திருப்பாச்சி, சிவகாசி போன்ற படங்களை இயக்கினார் பேரரசு.

அந்த படங்கள் இரண்டுமே சூப்பர் டூப்பர் ஹிட். விஜயின் சினிமா வாழ்க்கைக்கும் ஒரு டர்னிங் பாயிண்டாகவும் அந்தப் படங்கள் அமைந்தன. மேலும் ரசிகர்களிடம் வசனங்கள் மூலமாக விஜயை ஈர்க்கவைத்ததில் பேரரசுவின் பங்கு அதிகமானது. பொதுவாக இரு பெரும் நடிகர்கள் சினிமா துறையில் இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு தொழில் முனைப் போட்டி என்பது கண்டிப்பாக இருக்கும்.

இதையும் படிங்க: கோட் படத்தில் 5 நிமிஷம் ஆட்டம் போட இவ்வளவு கோடி சம்பளமா!. திரிஷா இப்பவும் கில்லிதான்!..

அதை போல் விஜயின் போட்டி நடிகர் அஜித். அஜித்தை தாக்கு பேசுவது மாதிரியான வசனங்களை பேரரசு அவரின் படங்களை வைத்து ரசிகர்களின் கைத்தட்டல்களை பெற்றார். இப்படி ஆரம்பகாலங்களில் விஜயின் கெரியர் உயர்ந்ததற்கு பேரரசுவின் படங்களும் ஒரு காரணமாகும்.

இந்த நிலையில் விஜயை பற்றி பேரரசு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியிருக்கிறார். அதாவது விஜய் அரசியலில் வந்த பிறகு அவர் கண்டிப்பாக ஜெயிப்பார் என்ற கோணத்திலேயே பேரரசு பேசி வருவதை நாம் பார்த்து வருகிறோம்.

இதையும் படிங்க: படம் ஹிட்டாகும்னு தெரியும்! இருந்தாலும் பிரசாந்த் நடிக்க மறுத்த தனுஷ் படம்

அதை போல் இன்றும் அவர் கூறும் போது சீமான் கிட்டத்தட்ட பல வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் 3 % ஓட்டுடன் ஒரு நல்ல நிலைமைக்கு வந்திருக்கிறார். அதை போல் பிஜேபியும் 8 % ஓட்டுடன் இருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் சீமான் மற்றும் அண்ணாமலை போன்றவர்கள் அடிக்கடி மக்களிடம் பேசி பேசி இந்த மாதிரி ஒரு வெற்றியை பதிவு செய்திருக்கிறார்கள்.

ஆனால் விஜய் அப்படி பேச வேண்டாம். ட்விட்டரில் ஒரு பதிவு மட்டும் போட்டால் போதும். அந்த இடத்தை அடைந்துவிடுவார். சீமான்,அண்ணாமலை இவர்களுக்கெல்லாம் 10 வருஷம் போராடி வென்றதை விஜய் 10 மாதத்தில் அடைந்துவிடுவார் என்று பேரரசு கூறியிருக்கிறார். இருந்தாலும் தேர்தல் நேரத்தில் மக்களின் பங்களிப்பும் வேண்டும் என்றும் பேரரசு கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: இளையராஜாவை விட்டு பிரிந்தும் வைரமுத்து பாடல் எழுதிருக்காரே… மொழிக்குத் தடையில்லையோ!

Next Story