விஜய் அஜித்தை வச்சு ஹிட் கொடுக்கிறது பெருசு இல்ல! இவர வச்சு கொடுக்கனும்.. பேரரசு சொன்ன நடிகர்

vijay
Director Perarasu: தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் உச்ச நட்சத்திரங்களாக இருப்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். இருவரும் சம காலத்தில் இந்த சினிமாவிற்குள் வந்து இன்று ஒரு பெரிய ஆளுமைகளாக இருந்து வருகின்றனர். கோலிவுட்டில் இவர்களின் படங்களுக்கு நல்ல ஒரு ஓபனிங் இருந்து வருகிறது. வசூல் மன்னர்களாகவும் திகழ்ந்து வருகிறார்கள்.
இருவருக்கும் இலட்சக்கணக்கில் ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். தொழில்முனையில் இவர்கள் இருவரின் படங்கள் தான் போட்டி போட்டுக் கொண்டு வெளியாகி வருகின்றன. அஜித் தற்போது குட் பேட் அக்லி திரைப்படத்திலும் விஜய் கோட் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரு திரைப்படங்களின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இதையும் படிங்க: ரஜினி செய்த சம்பவம்!.. நெகிழ்ந்து போன வைரமுத்து!.. பாசமுள்ள மனிதனப்பான்னு எழுதினது தப்பில்ல!..
இந்த நிலையில் ஆரம்பகாலங்களில் விஜய் அஜித்தை ஒரு ஆக்சன் ஹீரோவாக மாஸ் ஹீரோவாக காட்டிய பெருமை இயக்குனர் பேரரசுவையே சேரும். விஜய் வைத்து திருப்பாச்சி சிவகாசி போன்ற கமர்சியல் ஹிட் படங்களை கொடுத்ததன் மூலம் விஜயை ஒரு அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றார் பேரரசு.
அதைப்போல அஜித்திற்கு திருப்பதி போன்ற ஹிட் படத்தை கொடுத்து அவருடைய கெரியரையும் வேற லெவலுக்கு கொண்டு சென்றார். ஆனால் இதைப் பற்றி சமீபத்திய ஒரு பேட்டியில் பேரரசு கூறும்போது அஜித் விஜய் இவர்களை வைத்து ஹிட் படங்களை கொடுத்து விட்டேன். ஆனால் அதெல்லாம் எனக்கு ஹிட்டாக தெரியவில்லை.
இதையும் படிங்க: குழந்தை இல்லாத ஏக்கம்!.. எம்.ஜி.ஆருக்கு இருந்த செண்டிமெண்ட்!.. இப்படி எல்லாம் யோசிப்பாரா!…
ஏனெனில் விஜய் அஜித் இவர்கள் அப்போது ஒரு மாஸ் ஹீரோக்களாக இருந்தனர். அவர்களை வைத்து நான் சுமாராக படம் எடுத்திருந்தாலும் அந்த படம் ஹிட்டாகி இருக்கும். ஏனெனில் அவர்களின் மார்க்கெட் அப்படி இருந்தது. இதில் என்னுடைய வெற்றி என்பது கிடையாது.

perarasu
அதனால் ஒரு வளர்ந்து வரும் ஹீரோவை வைத்து ஹிட் கொடுத்தால்தான் இயக்குனர் என்ற வகையில் நான் வெற்றி அடைந்தவனாக கருதப்படுவேன். அதனால்தான் அந்த காலகட்டத்தில் காதல் போன்ற படங்களில் நடித்து வந்த பரத்தை வைத்து ஒரு கமர்சியல் படத்தை எடுப்போம் என பழனி படத்தை உருவாக்கினேன்.
அந்தப் படம் திருப்பாச்சி படத்தை போல வசூலில் சாதனை படைத்தது. தியேட்டர் உரிமையாளர்கள் இதைப் பற்றி என்னிடம் கூறும்போது நான் மிகவும் சந்தோஷப்பட்டேன். அப்பொழுதுதான் இயக்குனராக நான் வெற்றி அடைந்தவனாக கருதினேன் என பேரரசு அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்