அஜித் கழட்டிவிட்டா இப்படியா ட்ரீட் பண்ணுவீங்க!.. விக்னேஷ் சிவனுக்கு குடைச்சல் கொடுக்கும் பிரதீப்!..

ajith
திரையுலகை பொறுத்தவரை ஒரு இயக்குனரை ஒரு நடிகரோ, தயாரிப்பாளரோ நிராகரித்துவிட்டால் அவரின் இமேஜ் நிறையவே குறைந்துவிடும். அடுத்து அந்த இயக்குனர் ஒரு ஹிட் படம் கொடுக்கும்வரை அவரின் நிலை அப்படியேதான் இருக்கும். அதுவே, ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்துவிட்டால் ஹீரோக்களும், தயாரிப்பாளர்களும் அவரின் பின்னால் போவார்கள். அதாவது, வெற்றி மட்டுமே சினிமாவில் தரத்தை நிர்ணயிக்கும்.
அதேபோல்தான், தோல்வி படம் கொடுத்தாலும் இயக்குனரின் மதிப்பு கீழே போய்விடும். தர்பார் வெளியாகி 2 வருடங்கள் ஆகியும் ஏ.ஆர்.முருகதாஸ் இன்னும் ஒரு புதிய படத்தை இயக்கவில்லை. விஜயே அவரை நிராகரித்து நெல்சன் பக்கம் போனார். அப்படித்தான் பீஸ்ட் படம் உருவானது.
இதையும் படிங்க: ரஜினிகாந்த் நடிக்க இருந்த படத்தில் இருந்து எஸ்கேப் ஆன இயக்குனர்…! காமெடி நடிகருக்கு அடித்த அதிர்ஷ்டம்..!
பாபா படம் தோல்வி அடைந்தபோது துவண்டுபோன ரஜினி 2 வருடங்கள் கழித்துதான் சந்திரமுகி படத்தை கொடுத்தார். நயன்தாராவை வைத்து நானும் ரவுடிதான் எனும் ஹிட் படத்தை கொடுத்தவர் விக்னேஷ் சிவன். ஆனால், அதோடு சரி. அதன்பின் அவர் இயக்கிய தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய 2 படங்களுக்கு ஓடவில்லை.
இருந்தாலும் அஜித் அவருக்கு வாய்ப்பு கொடுத்தார். ஆனால், சரியான கதையை உருவாக்காமல் மெத்தனம் காட்டியதால் கடுப்பான அஜித் அவரை படத்திலிருந்து தூக்கிவிட்டார். அதன்பின்னர்தான் மகிழ் திருமேனி ஓகே செய்யப்பட்டு இப்போது விடாமுயற்சி படம் உருவாகி வருகிறது. அஜித் படம் டிராப் ஆனதால் லவ் டுடே பிரதிப் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கிறார்.
இதையும் படிங்க: முதல் காட்சி ரஜினியுடன்!.. கடைசி காட்சி கமலுடன்! – முதல் படத்திலேயே ஜாம்பவான்களுடன் நடித்த நடிகை..
ஆனால், இந்த ‘நடிகர் வேண்டாம். அவர் நடிக்கட்டும்.. இந்த கேமராமேன் வேண்டாம்’.. என எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்கிறாராம் பிரதீப். ஏனெனில், கோமாளி, லவ் டுடே என இரண்டு ஹிட் படங்களை கொடுத்தவர் அவர். அதோடு, தான் இரண்டாவது ஹீரோவாக நடிக்கும் படம் என்பதால் படம் நன்றாக வரவேண்டும் என நினைப்பதில் தப்பில்லை.
ஆனால், விக்னேஷ் சிவனுக்கு இது தலைவலியை ஏற்படுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் கதாநாயகியின் அக்காவாக நயன்தாராவும் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.