தமிழ் சினிமாவில் சிவாஜிக்கு பிறகு நடிப்பில் ஒரு ஒப்பற்ற நடிகராக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தொடர்ந்து ஹீரோவாக நடித்து கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சினிமாவில் தனக்கான ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார் கமல். சினிமாவை பற்றி தெரியாத விஷயங்களே இல்லை என்று சொல்லலாம். ஆனால் இன்னும் நான் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது என அடிக்கடி கூறுபவர் கமல்.
அதனாலேயே இப்போது அதிகமாக பேசப்படுகின்ற தொழில் நுட்பமான ஏஐ தொழில் நுட்பத்தை பற்றி படிக்க அமெரிக்கா சென்றிருக்கிறார் கமல். அதை எப்படி சினிமாவில் இம்ளிமெண்ட் பண்ணலாம் என்ற யோசனையில்தான் அந்த தொழில் நுட்பத்தை படிக்க சென்றிருப்பார் கமல். சினிமாவில் அவர் அடையாத சாதனைகள் இல்லை. வாங்காத விருதுகள் இல்லை.
இதையும் படிங்க: ரஹ்மான் கிடைச்சது பெரிய பாக்கியம்.. சாயிராவுக்கு அன்பான வேண்டுகோள் வைத்த இயக்குனர்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ,ஹிந்தி போன்ற பிற மொழிப் படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். அதிக மொழிகள் தெரிந்த ஒரே நடிகர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் கமல். ஆனால் இத்தனை பெருமைகள் இருந்தும் ரஜினியை மாதிரி பெரிய அந்தஸ்துடன் வலம் வருகிறாரா என்றால் இல்லை. அவருக்கு இருக்கும் ரசிகர் பட்டாளத்தை விட கமலுக்கு குறைவுதான்.
இன்று சினிமாவில் நல்ல ஓப்பனிங் என்றால் அது ரஜினி படத்திற்கும் விஜய் படத்திற்கும் தான். ஆனால் இவர்கள் இருவருக்கும் முன்பே சினிமாவில் வந்து பல ஹிட் படங்களை கொடுத்த கமலின் படத்திற்கு அப்படி ஒரு ஓப்பனிங் இருந்ததில்லை. அதற்கு காரணம் என்ன என்பதை பிரபல இயக்குனர் பிரவீன் காந்தி கூறியிருக்கிறார். இப்போது சினிமாவில் ஹாட் டாப்பிக்காக பேசப்படுவது ரஹ்மான் விவாகரத்து பிரச்சினை பற்றித்தான்.
அதை பற்றி பேசும் போது ரஹ்மான் இன்று சமுதாயத்தின் ரோல்மாடல். அவருக்கு இப்படி ஒரு பிரச்சினை வரும் போது மிகவும் வலிக்கிறது. ரோல் மாடல்னு ஏன் சொல்கிறேன் என்றால் தமிழ் நாட்டை பொறுத்தவரைக்கும் ஒரு விஷயம் இருக்கிறது. நீங்க எவ்ளோ பெரிய ஹீரோவாக இருந்தாலும் ஒரு பெண்ணோட வாழனும்னு ஒரு முறையே இருக்கிறது.இதில் எம்ஜிஆர் ஆகட்டும், சிவாஜி ஆகட்டும், ரஜினி ஆகட்டும். அதை உடைத்தவர் கமல்.
இதையும் படிங்க: தனுஷுக்கு எதிராக கிளவர் ப்ளான்.. ரியல் நீலாம்பரியாக மாறிய லேடி சூப்பர் ஸ்டார்
அதனால்தான் கமல் அந்த டாப்புக்கே வரமாட்டார். ஏனெனில் ஒரு மனிதனின் சகிப்புத்தன்மை எங்கு வெளிப்படுகிறது என்றால் திருமணத்தில்தான். அங்கு சகிப்புத்தன்மையை காட்டி பொறுமையை வெளிப்படுத்தினால் ஊருக்கு ஒரு ரோல் மாடலாக இருப்பீர்கள் என பிரவீன் காந்தி கூறினார்.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…