விஜயை வச்சு படம்தான் எடுக்க முடியல! அதான் இந்த முடிவ எடுத்துட்டேன்.. இயக்குனர் கொடுத்த ஷாக்
Actor Vijay: இன்று கோலிவுட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவரின் படங்களை எதிர்பார்த்து பல தியேட்டர் உரிமையாளர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். விஜய் நடிக்கும் படத்தின் கதையை நம்பி இல்லை. அவரை நம்பி. ஏனெனில் விஜய் ஸ்கிரீனில் வந்தாலே ஏகப்பட்ட ரசிகர்கள் அவருக்காக தியேட்டர் தியேட்டராக ஓடி வருகிறார்கள்.
அதன் மூலம் திரையரங்க உரிமையாளர்களின் கல்லா நிறையும். அந்தளவுக்கு வசூல் சக்கரவர்த்தியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் விஜய். தற்போது விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். 90களில் முன்னனி நடிகர்களாக இருந்த நடிகர்களும் விஜயுடன் இந்த கோட் படத்தில் இணைந்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: விடாமுயற்சி ரிலீஸ் தேதி இதுவா?!.. அப்செட்டில் இருந்த ஏகே ரசிகர்களுக்கு இது செம அப்டேட்தான்!..
பிரசாந்த், பிரபுதேவா ,லைலா, சினேகா என நிரம்பி வழியும் கோட் படத்தை எதிர்பார்த்து அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று வெளியான தகவலின் படி படம் மிகவும் ஸ்லோவாக போவதால் வெங்கட்பிரபுவை அழைத்து விஜய் இன்னும் வேகப்படுத்த சொன்னதாக செய்தி வெளியானது.
கோட் படத்திற்காக விஜய் பெரும்பாலும் மீசை இல்லாமலேயே காணப்படுகிறார். படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற போது அவ்வப்போது ரசிகர்களை சந்திக்க வெளியே வந்தார் விஜய். அப்போதெல்லாம் அவர் மீசை இல்லாமல் இருந்ததை பார்க்க முடிந்தது. அதுவும் இணையத்தில் மிகவும் டிரெண்டிங்கானது.
இதையும் படிங்க: அயலானை பிரிஞ்சி இருக்க முடியல போல! பிறந்த நாள் ட்ரீட்டாக சிவகார்த்திகேயன் கொடுக்கப் போகும் சர்ப்ரைஸ்
இந்த நிலையில் நாகர்ஜூனாவை வைத்து ஹாலிவுட் தரத்தில் ரட்சகன் படத்தை எடுத்த இயக்குனர் பிரவீன் காந்தி தற்போது மீசை இல்லாமல் காணப்படுகிறார். இதை பற்றி அவரிடம் கேட்டதற்கு ‘விஜயை வைத்து படம் எடுக்கலாம் என இருந்தேன். அது நடக்க வில்லை. அதனால்தான் விஜய் மாதிரி மீசையை எடுத்துவிட்டேன்’ என கூறியிருக்கிறார்.